பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தொல்காப்பியம் அவண் கூற்று வரையார்-அவ்விடத்துக் கூறுதலை நீக்கார். அவண் - அவ்விடம்; என்றது மேற்குறித்த நாய் முதலிய ஐந் திடங்களையும் சொல் நிகழ்ச்சிக்குப் பொருள் இடம். ஆதலின் அவன் என்றார். சீவகசிந்தாமணி 364-ஆம் பாடலுரையில், 'சிங்கக்குட்டியும் போன்று குட்டியும் பறழும் கூற்றவண் வரை யார்' என்றதனுள், கூற்று என்றதனால் புலிமுதலியவற்றிற்குக் கூறிய இளமைப் பெயர் சிங்கத்திற்கும் கொண்டார்’ எனக் குறிப்பிடுவர் நச்சினார்க்கினியர். ($o) கக. பிள்ளைப் பெயரும் பிழைப்பாண் டில்லை கொள்ளுங் காலை நாயலங் கடையே இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின். இதுவுமது (இ - ள்.) மேற்கூறியவற்றுள் நாயன்றி ஒழிந்தவை பிள்ளை என்னும் இளமைப் பெயர்க்கு உரிய என்றவாறு.1 பன்றிக்குருளை, பன்றிக்குட்டி, பன்றிப்பறழ், பன்றிப்பிள்ளை எனவுமாம். ஏனையவும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. பேராசிரியம் : (இ-ள்) மேற்கூறிய ஐந்து சாதியுள்ளும் நாயொழித்து ஒழிந்த நான்கற்கும் பிள்ளையென்னும் பெயர்க்கொடையும் உரித்து (எ-று). - இவை செய்யுட்கண் வருவன கண்டுகொள்க. 'கொள்ளுங் காலை யென்றதனான் முற்கூறிய நாய் முதலாகிய நான்கும் விலக்கி2 நரிப்பிள்ளை யென்பதே கோடலும் ஒன்று. - 1. பிள்ளையென்னும் இளமைப் பெயர், நாயொழிந்த நான்கு உயிர்க்கண்ணும் கூறுங்காலை குற்றமிலை என்றவாறு. உ.வே. பிழைப்பு - குற்றம். - 2. நாயலங்கடையே என்ற தொடரால் முற்கூறிய (மரபு அ) தாய் முதலிய நான்கனையும் விலக்கி நரிப்பிள்ளை' என நரி என்பதற்கு மட்டுமே பிள்ளைப் பெயர் கொள்ளுதலும் ஒன்று.