பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 艺勤 எனவும் கொள்க’’ என்பர் பேராசிரியர். எனவே புல்வாய் என்பது மிகவும் இளமையுடையதெனக் கருதவேண்டியுளது. நவ்வி என்பது புள்ளிமான் என்பாரு முளர். {്കല), கi. கோடுவாழ் குரங்கு குட்டியுங் கூறுய! இனம்பூரணம் : (இ-ள்) கோடுவாழ் குரங்கென்பது ஊகமு முசுவுங் கொள்ளப்படும். உம்மை எதிரதுதழிஇய எச்சவும்மை2 டிேராசிரியம் : (இ-ன்) கோட்டினையே வாழ்க்கையாகவுடைய குரங்குங் குட்டியென்று கூறப்படும் (எ-று). கோடுவாழ் குரங்கு'3 எனவே குரங்கின் பிறப்புப் பகுதி யெல்லாங் கொள்க. அவை குரங்குக்குட்டி, முசுக்குட்டி, ஊகக் குட்டியென்பன. உம்மை இறந்தது தழிஇயிற்றாதலான் மேற் கூறிய யாடு முதலாகிய ஐந்துசாதிக்குங் குட்டியென்னும் பெயர் கூறப்படுமென்பது. அவை யாட்டுக்குட்டி, குதிரைக்குட்டி, நல்விக் குட்டி உழைமான்குட்டி புல்வாய்க்குட்டி எனவரும். 1. கோடு வாழக் குரங்குங் குட்டி கூறுப. பா.வே. 2. குட்டியும் என்புழி உம்மை பின்வரும் மகவு முதலிய இளமைப் பெயர்களையும் தழுவி நிற்றலின் எதிரது தழிஇய எச்சவும்மை யாயிற்று. 3. கோடுவாழ்குரங்கு குட்டியுங் கூறுப' என இளப்பூரணரும் கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப' எனப் பேராசிரியரும் பாடங்கொண்டனர். குட்டியும் என்புழி உம்மை பின்னர்க் கூறுமாறு மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு என்னும் இளமைப் பெயர்களாற் கூறுதலேயன்றிக் குட்டி என்ற பெயராலும் வழங்கப்பெறும்எனப்பொருள் தருதலின், உம்மை எதிரது தழி இய எச்சவும்மை என்றார் இளம்பூரணர். குரங்கும் எனப் பாடங்கொண்ட பேராசிரியர்,இச்சூத்திரத்திற்குறித்த குரங்கே யன்றி முற்கூறிய யாடு முதலியன ஐந்துசாதிக்கும் "குட்டி’ யென்ற பெயர் கூறப்படும் எனப்பொருள் கொண்டாராதலின் குரங்கும் என்புழி உம்மை இறந்தது தழீஇயிற்று' என்றார்.