பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் - 23 பார்ப்புமெனப்பட்ட இந்நான்கும் குட்டியென்னும் பெயர்போல அக்குரங்கின் பகுதிக்கு உரியவாம் (எ-று). ' உயர்கோட்டு மகவுடைமந்தி போல " (குறுந் : 29) எனவும், ' குரங்குப் பிள்ளை' எனவும், ' வரையாடு வன்பறழ்த் தந்தை' 'குறுந் : 26) எனவும், ஏற்பன வேற்பன வுண்னும் பார்ப்புடை மந்திய மலையிறந் தோரே (குறுந்: 278) எனவும் வரும். அன்ன வென்பதனான் முன்னையவற்றொடொக் கும். மிகுதி குறைவு இலவென்பதாம். வெயிலாடு முசுவின் குருளை யுருட்டும்” (குறுந் , 38) என(564) இலேசினாற் கூறிப்போந்தமையின் ஈண்டு அது கூறா னாயினான்; அன்றி, அஃது இத்துணைப் பயிலாமையானு மென்க. ஏழாமுறை நின்ற மகவினை ஈண்டு வைத்தான் அதி காரப்பட்டபெயர்க்குரிமையானென்பது. ஆய்வுரை : (இ-ஸ்) இதுவும் குரங்கிற்குரிய இளமைப்பெயர்கள் கூறு கின்றது. மேற்குறித்த குட்டிஎன்னும் பெயரேயன்றிமகவு, பிள்ளை பறழ், பார்ப்பு எனவரும் அவ்விளமைப்பெயர்களும் குரங்கின் பகுதிக்கு உரியவாகும் எ-று. அப்பால் - அப்பகுதி - (33)

  • இவ்வெண் தொல்காப்பியம்மூலம் முழுமையையும் குறிக்கும். வரிசையில் அமைந்த நூற்பா எண்ணாகும் இது மரபியல் 9-ஆம் நூற்பாவைக் குறிக்கும். 1. நரியும் அற்றே நாடினர் கொளினே' (மரபியல்-சு) என்ற நூற்பாவில் நாடினர் கொளினே என்ற இலேசினானே முசுவிற்குங் குருளைப்பெயர் கொள்ளவைத்தமையின் குரங்கிற்குரிய இளமைப்பெயர் கூறும் இச்சூத்திரத்தில்குருளை யென்னும் பெயரை ஆசிரியர் குறிப்பிடவில்லை என்பது பேராசிரியர் தரும் விளக்கமாகும்.