பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிரைவியல் 癸 கசு. எருமையும் மரையும் வரையார் ஆண்டே. இளம்பூரணம்: (இ-ஸ்) என்றது, கன்றெனக் கூறும் இளமைப்பெயர் எருமைக்கும் மரைக்கும் உரித்து என்றவாறு.1 (இ-ள்) எருமையும் மரையுங் கன்றெனப்படும் (எ-று) அவை, எருமைக்கன்று, மரையான்கன்று என்பனவழக்கு. ' கன்றுடை மரையா துஞ்சம்' (குறுந்: 1.15) கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் குன்ற நாடற் கண்டவெங் கண்னே’’ (குறுந்:241) எனவரும். வரையா’2 ரெனவே அவையெல்லாம்போலாது சிறு வரவின என்பது பெற்றாம். ஆய்வுரை : (இ-ள்) எருமைக்கும் மரைக்கும் கன்று என வழங்கும் இளமைப்பெயரினை நீக்காமல் ஏற்று வழங்குவர் எறு. (கசு) கன கவரியும் கராகமும்3 நிகர வற் றுள்ளே, இளம்பூரணம் : (இ-ள்) என்றது கவரி என்று சொல்லப்படுவதும் கராகமென்று சொல்லப்படுவதும் கன்றென்னும் பெயர் பெறும் என்றவாறு." கராகமென்பது கரடி. 8 1. ஆண்டு-கன்று என்னும் இளமைப்பெயர் பெறும் நிலையில்; எருமையும் மரையும் வரையார் - எருமையினையும் மரைமா வினையும் விலக்காது ஏற்றுக் கொள்வர். 2. வரையார்-நீக்கார் வரைதல்-நீக்குதல். கரஈமும்-பா. வே. 4. கவரியென்றும் கராமென்றுஞ் சொல்லப்படுவது உம் கன்றென்னும் பெயர் பெறும், எ-று உ.வே. 5. கராமென்பது கரடி - உ.வே.