பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தொல்காப்பியம் இஃது, அவற்றொடு மாட்டெறிந்தது. (இ-ள்) கவரியுங் கராமுங் கன்றெனப்படும் (எ-று). கவரிமான்கன்று கராக்கன்று. எனவரும் அவற்றுள்ளே யென்பது முற்கூறிய ஏழனுண் முதனின்ற யானையோடொக்கு மென்றவாறு. இதன் பயம், ' குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை' (தொல்-மர : 19) என வருகின்ற பெயரும் இவற்றுக் கெய்துவித்தலாயிற்று. அது முன்னர்ச் சொல்லும்.2 இவையெல்லாந் தம்மினொத்த வரவின அன்மையின் வேறுவேறு சூத்திரஞ் செய்கின்றவாறாயிற்று. ஆய்வுரை : (இ-ள்) கவரி என்று சொல்லப்படுவது கராகம் என்று சொல்லப்படும் அவ்வுயிர்களுள் கன்று என்னும் இளமைப்பெயர் பெறுவதில் ஒத்த தன் மையன எ-று. 'கராகம்’ என்பது இளம்பூரணர் கொண்ட பாடம் கராம் என்பது பேராசிரியர் கொண்ட பாடம். கராகம்-கரடி. கராம்முதலையுள் ஒரு சாதி (ઠst) கவு. ஒட்டகம் அவற்றோ டொருவழி நிலையும்3 இளம்பூரணம் : (இ-ன்) என்றது ஒட்டகமென்று சொல்லப்படுவதுங் கன்றென்னும் பெயர் பெறும் என்றவாறு, Gurai : (இ.ஸ்) சிறுபான்மை ஒட்டகமுங் கன்றெனப்படும் (எ-று). 1. 'கராகம்’ எனப் பாடங்கொண்டு 'கரடி" எனப் பொருள் கூறுவர் இளம்பூரணர். கராக்கன்று-முதலைப்பார்ப்பு. 2. அது முன்னர்ச் சொல்லுதும் என்று இவ்வுரைத் தொடரைத் திருத்துக. மரபியல் கிக-ஆம் சூத்திரவுரை நோக்குக. ஒட்டகமவற்றினோ டொருவழி நிலையும். பா.வே. 3