பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 33 மரனும் உயிரெனப்படுமோவெனின்,-அவற்றை யுயிரென்றன் மரபுபட்ட வழக்காகலின் அம்மரபுங் கோடற்குக் கூறினான், 'மரம் உய்ந்த தென்பவாகலின் . ஆய்வுரை : (இ-ள்) புல், மரம் எனப் பகுத்துரைக்கப்படும் ஒரறிவுயி ராகிய தாவரங்கட்குப் பிள்ளை, குழவி, கன்று, போத்து என்னும் இளமைப்பெயர் நான்கும் (இளமை குறித்த) பெயர்களாகக் கொள்ளுதலும் பொருந்தும் எ-று. கொள்ளவும் என்புழி உம்மை எதிர்மறையாகலால் இவற்றுள் கன்று என்ற பெயரே பெரும்பான்மை என்பர் இளம் பூரணர். ஓரறிவுயிர்க்குக் கொள்ளவும் அமையும் என்னும் எச்ச வும்மையாகக் கொண்டு இளமை பற்றிய இப்பெயர்கள் பிறவிடங் களிலும் கொள்ளப்படும் எனவும், ஒரறிவுயிர் ஈண்டுக் கூறியது குழவி என்னும் இளமைப்பெயர் அதிகாரப்பட்டமையான் எனவும் கூறுவர் பேராசிரியர். பிள்ளைவெண்பிறை (சீவக-2390) எனவரும் சீவகசிந்தா மணிப் பாடலுரையில், 'பிள்ளைப்பிறை யென்பது, பிள்ளை குழவி (தொல்-மரபியல்-24) என்னுஞ் சூத்திரத்து உம்மையை எச்சப்படுத்தி அதனாற்கொள்க’ என்றார் நச்சினார்க்கினியரும். ஒரறிவுயிருக்குரியதாக இங்குக் கூறப்பட்ட போத்து: என்னும் இளமைப் பெயரும், ஏறும ஏற்றையும் (மரபியல்-2) என்னும் சூத்திரத்துக் கூறப்பட்ட போத்து' என்னும் ஆண்மைப் பெயரும் தம்முள் வேறெனவுணர்க. ) نتی ہے{ உடு. நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின் எய்தியது விலக்கல் துத லிற்று. 1. புல், மரம் என்பவற்றை உயிரென்றல் மரபுபட்ட வழ்க்காத லின் அம்மரபுங் கோடற்குப் பிள்ளை, குழவி, கன்று, போத்து என்பன ஓரறிவுயிர்க்குக் கொள்ளவும்படும் என்றார் ஆசிரியர்.