பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器魔 தொல்காப்பியம் (இ-ன்) மேற்கூறப்பட்ட நான்கின் இளமைப் பெயரும் கொள் ளார் நெல்லும் புல்லுமென வரும் ஒரறிவுயிர்க்கு என்றவாறு : உம்மை எதிர்மறையாதலின் மேற்சொல்லப்பட்ட இளமைப் பெயர் கூறப்பெறார் என்றவாறு. பேராசிரியம் : இஃது, எய்தியது விலக்குகின்றது. - (இ-ன்) அந்நான்கு பெயரானும் நெல்லும் புல்லுஞ் சொல்லப்படா (எ-று). மற்றுப்,

  • புறக்கா ழனவே புல்லென மொழிப’ (தொல்-மர 85)

எனுமாகலான் மேற்காட்டிய கமுகு முதலாகிய புல்லும் விலக்குண்ணும் பிறவெனின், அற்றன்று; புல்லென்பது பல பொருளொரு சொல்லாகலான் நெல்லென்னும் இனத்தானே வேறுபடுத்துப் புல்லென்பது (புறம் : 248) உணவின்மேற் கொள்க.2 1. நெல்லும் புல்லுமென வரும் ஓரறிவுயிர்கள் மேற்சொல்லப் பட்ட இளமைப்பெயர் கூறப்பெறா வென்றவாறு உ.வே. 2. இச்சூத்திரத்திற் புல் என்றது. புறத்தே வயிரமுடையன வாகிய கமுகு, தெங்கு முதலியவற்றைக் குறித்ததன்று. புல் என்பது பலபொருளொரு சொல். அது நெல்’ என்னும் இனத்தானே புல் என்னும் உணவாகிய தாவரத்தைக் குறித்தது. “அல்லிப் படுஉம் புல்லாயினவே” (புறநானூறு-248) என்புழிப் புல் என்பது புல்லரிசியினை விளைக்கும் ஒரறிவுயி ராகிய தாவரத்தைக் குறித்து நிற்றல் காண்க. இனி, நெல் என்பது நெற்பயிராகிய ஓரறிவுயிரைக் குறித்தல் போன்று, அதனுடன் எண்ணப்பட்ட புல்” என்பது, புற்பயிராகிய தாவரத்தைக் குறித்ததெனக் கொள்ளுதலும் பொருந்தும். ' நெல்லுக்கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' (மூதுரை-10) என்ற பாடலில் நெல்லும் புல்லுமாகிய ஒரறிவுயிர் ஒருங்கே குறிக்கப் பெற்றுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.