பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 35 ஆய்வுரை : இஃது எய்தியது விலக்கிற்று. (இ-ள்) மேற்குறித்த இளமைப்பெயர் நான்கினையும் நெல், புல் என்னும் ஒரறிவுயிர்க்குரியனவாக உடன்பட்டு வழங்க மாட்டார்கள் அறிஞர் எ-று ‘புல் என்பது பல பொருளொருசொல். அது உணவுப் பயிராகிய நெல்லைச் சார்த்திக் கூறப்பட்டமையால் புல்” என்பது ஈண்டு உணவுவகையாகிய கூலப்பயிரைக் குறித்து நின்றது. புறத்தே வயிரமுடைய தாவரத்தைக் குறித்த புல்' என்பது இதனின் வேறெனக் கொள்க. நேர்தல் - உடன்படுதல். (உடு) உசு. சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின் இளமைப்பெயரை வரை யறுத்து உணர்த்துதல் துதலிற்று. (இ-ள்) சொல்லிப்போந்த மரபுடையனவன்றிச் சொல்ல வேண்டு மரபுடைனயவற்றிற்குஞ் சொல்லுமிடத்து இவைதாமே இளமைப்பெயர் என்றவாறு. என்பது என்சொன்னவாறோ வெனின், பரந்துபட்டவுயிர்த் தன்மை யெல்லாம் ஈண்டு ஒதப்பட்டனவல்ல, எடுத்தோதாதன வற்றிற்கு ஈண்டு ஒதப்பட்ட இளமைப் பெயரல்லது பிற பெய ரின்மையின், இவற்றுள் ஏற்பனவற்றோடு கூட்டியுரைக்க என்ற வாறாம். இத்துணையும் கூறப்பட்ட சூத்திரத்திற்கு, உதாரணம் : ' பறவைதம் பார்ப்புள்ள ' (கலித். ககa) ' வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே' * யாமைப் பார்ப்பின் அன்ன.' (குறுந்: கடுக.) ' தன் பார்ப்புத் தின்னும் பண்பின் முதலை’ (ஐங்குறு: சக) பார்ப்பு, பிள்ளை பிறவும் பறப்பன ஊர்வனவெல்லாம் இவ்வகையினாற் கூறுப, நடப்பனவற்றுள், மூங்காக்குட்டி, மு, 胚炸