பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

氢较 தொல்காப்பியம் புல்லும் மரனும் ஒரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' (தொல்-மரபியல் உவு) இதனுட் பிறஅறிவும் உளவென்று கூறினார்; அதனாற் பாவத் திற்கு அஞ்சி மரம் கவின் வாடிற்று என்றார்” என நச்சினார்க் கினியர் எழுதிய உரை விளக்கத்தால் நன்கு புலனாதல் காணலாம். (உ.உ) உr. நந்தும் முரளும் ஈரறி வினவே பிறவும் உலாவே அக்கிளைப் பிறப்பே இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின் ஈரறிவுயிர் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ன்) ஈரறிவுயிராவன நிந்தும், முரளுமென்று சொல் லுவ; பிறவுமுள ஈரறிவுயி ரென்றவாறு. நந்து என்றதனால் சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பன கொள்க. முரள் என்றதனால் இப்பி, கிளிஞ்சில், ஏரல் என்பன கொள்க, பேராசிரியம் : இது,முறையானே ஈருணர்வுடையன வுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). நந்தும் முரளும் ஈரறிவாகிய ஊற்றுணர்வும் நாவுணர்வுமுடையன. பிறவும் அக்கிளைப் பிறப்பு உள (எ-று) இரை சுவைகோடலும் பிறிதொன்று தாக்கியவழி அறிதலு முடைமையின் மெய்யுணர்வோடு நாவுணர்வு முடையன வென்ற வாறு. இவற்றுக்குக் கிளையென்பன கிளிஞ்சிலும் முற்றிலும் (மட்டிச்சுண்ணாம்பு) முதலாகிய கடல்வாழ் சாதியும் பிறவுமெனக் கொள்க2 , பிறப்பென்பன முற்கூறியவாறே கொள்ளப்படும். 1. பிற என்றது, இந்நூற்பாவில் எடுத்தோதப் படாத ஈரறி வுடைய பிறவற்றை. 2. உண்ட இரையின் சுவை கொள்ளுதலால் நாவுணர்வும், பிறி தொன்று தம் மேல் தாக்கியவழி அறிதலால் ஊற்றுணர்வும் ஆகிய ஈரறிவுடையன. நந்து-நத்தை. முரள்-முற்றில், என்பன கல்டவாழ் சாதியாகிய சிப்பிவகைகள்.