பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரையியல் 学部 ஆய்வுரை : இதுமுதல் சுஅ முடியவுள்ள சூத்திரங்களால் பெண்மை பற்றிய மரபுப்பெயர் கூறுகின்றார், (இ-ன்) பிடி என்னும் பெண்பாற் பெயர் யானை யினத்துக்கு உரியதாகும் எ-று. இனி, பெண்மை பற்றிய மரபுப்பெயர் கூறத் கொடங்கு கின்றாம் எனப் புலப்படுத்துவார், பிடி யென்னாது பிடியென் பெண்பெயர்’ என விரித்துக் கூறினார். (♔ല്ല.) டுங் ஒட்டகம் குதிரை கழுதை மரையிவை பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய, இளம்பூரணம் : (இ- ள்) பெட்டை என்னும் பெயர் ஒட்டக முதலாகச் சொல்லப்பட்ட நான்குக்கும் பெண்பாற்குப் பெயராம்என்றவாறு. பேராசிரியம் : (இ-ள்) ஒட்டகமுங் குதிரையுங் கழுதையும் மரையாவும் பெட்டையென்னும் பெயர்பெறும் (எ-று). ஒட்டகப்பெட்டை, குதிரைப்பெட்டை, கழுதைப்பெட்டை மரையான்பெட்டை என வரும். ஆய்வுரை : (இ-ண்) பெட்டை என்னும் பெண்மைப் பெயர் ஒட்ட கம் குதிரை, கழுதை, மரை என்னும் இவை நான்கிற்கும் உரியதாகும் எ-து. எழுந்து விண்படரும் சிங்கப் பெட்டைமேல் இவர்ந்து' (752) எனவரும் சீவக சிந்தாமணிச் செய்யுளுரையில், ஒட்டகம்..... 1. பெட்டை என்பது பெண்பாற்குரிய மரபுப்பெயர். 'எழுந்து விண்படரும் சிங்கப் பெட்டைமேல் இவர்ந்து (சீவக. 752) என்பதன் உரையில், "இதனுள் கொடை" என்றதனால் சிங்கத்திற்கும் பெட்டை கொண்டவாறு காண்க. என இம் மரபியற் சூத்திரத்தை எடுத்துக்காட்டி விளக்கினார் தச்சினார்க்கினியர்.