பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் * மற்று, வழக்கிலக்கணஞ் செய்யுட்கும் பொதுவாகலின் இங்ங்னம் இரண்டற்கும் பொதுவாகிய மரபினையுஞ் செய்யுளிய வின் முன் வைக்கவெனின், அவ்வாறு வழக்குஞ் செய்யுளுமென்ற இரண்டுமல்லாத நூலிற்கும் ஈண்டு மரபு கூறினமையின் இது செய்யுளியலின் பின் வைக்கப்பட்டது. இவ்வோத்தின் முதற்குத்திரம் என்னுதலிற்றோவெனின் எல்லாப் பொருளின்கண்ணும் இளைமைக்குனம் பற்றி நிகழுஞ் சொல் இவையென்று வரையறுத்துக் கூறுகின்றது. (இ-ன்) : மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின் -விலக் கருஞ் சிறப்பிற்றாகிய மரபிலக்கணங்கூறின்; பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதுங் குழவியோடு இளைமைப்பெயர்-குழவியோடு இவை யொன்பதும் இளைமைப்பெயர் (எ-று). - மேலன எட்டுங் குழவியுமென இளைமைப்பெயர் ஒன்ப தாயின. குழவியோடொன்பதென்னாது ஒன்பதுங் குழவியோ' டென மயங்கக் கூறியதனாற் போத்தென்பதும் இளைமைப்பெய ரெனவும் பிறவும் வருவன உளவாயினுங் கொள்ளப்படும். இவற்றையெல்லாம் மேல்வரையறுத்து இன்ன பொருட்கு இன்ன பெயர் உரித்தென்பது சொல்லும். ' மாற்றருஞ் சிறப்பின்’ என்றதனானே இவை ஒருதலையாகத் தத்தம் மரபிற் பிறழாமிற் செய்யுள் செய்யப்படுமென்பது உம் ஈண்டுக் கூறாதனவாயின் வழக்கொடுபட்ட மரபு பிறழவுஞ் செய்யுளின்பம் படின் அவ்வாறு செய்பவென்பது உங் கூறியவாறாயிற்று. அகவிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பரிதி' (பெரும்பாண்: 1-2) எனவும், 1. மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்றதனால், இவ்வியலிற் கூறப்படும் மரபுப் பெயர்கள் எக்காலத்தும் தத்தம் மரபிற் பிறழாமல் செய்யுள் செய்யப்படும் என்பதும், இவ்வியலிற் கூறப்படாத மரபுகளாயின் அவை செய்யுளின்பம் வேண்டி வழக்கொடு பொருந்திய மரபிற் பிறழவும் செய்யுள் செய்யப் பெறும். எனவே, அவை மாற்றுதற்கு உரியவாதலும் கூடும் என்பதும் கூறியவாறு,