பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

品、 தொல்காப்பியம் - பொருளதிகாரம்

என்னும் பாட்டினுள் உலகளித்தற்கு மாரியும் உண்டென மாரியை உவமித்துச் சிறப்பித்துக்கூறுவான், மாரியைச் சிறப்பித்துப் பாட்டுடைத் தலைவனாகிய பாரியை உயர்த்துக்கூறாதான் போல இயல் பினான் உவமை கூறினானாம்; இது மாரிக்கும் பாரிக்கும்ஒரிழிவில்லை யென்னுந் தன்மைப்படக் கூறவே அவனுயர்வு கூறுதலிற் பயனிலை புரிந்த வழக்கெனப் படுமென்பது."

'கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின்

வில்லோர் துணி வீங்கப் பெய்த அப்பு:துனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச் செப்பட ரன்ன செங்குழை யகந்தோ நிழுதி னன்ன தீம்புழல் துய்வாய் உழுதுகாண் துளைய வாகி ஆர்கழல் பாலி வானிற் காலொடு பாறித் துப்பி னன்ன செங்கோட்டியவின் நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும்... (அகம்.9)

என்பதும்,

'நீளரை யிலவத் தலங்குசினை பயந்த

பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன வரிப்புற வணிலொடு கருப்பை யாடா தியாற்றறல் புரையும் வெரிதுடைக் கொழுமடல் வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை'

(பத்துப் பெரும் பாண். 83, 8)

என்றாற்போல்வனவும் அது.

'கொல்வினைப் பொலிந்த' (அகம் .9)

என்பதனுள் இந்நிலத்தின் மக்கள் அம்பினை உவமையாக்கி ஆண்டையவாகிய இருப்பையின் பூங்கொத்தை உவமிக்கப்படும்

1. இப்பாடலில் உலகினைப் பாதுக த்தற்கு மாரியை உவமித்துச் சிறப்பித் துப் பாட்டுடைத் தலைவன கிய பாரியை உயர்த்துக் கூறாதார்போன்று இயல்பாக உவமை கூறுவாராயினும், இது மாரிக்கும் பாரிக்கும் உலகுபுர க்குக்தி றத்தில் ஒர் 2.யர் அதாழ்வு இல்லையென்னும் தன்மை தோன்றக் கூறுதலின் இது பயனிலை புரிந்த வழக்காவிற்று. இது பிறர் கொள்கையினை எடுத்துரைத்து மறுத்தது.