பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

安茨夺_ தொல்காப்பியம்-பொருளதிகாரம்

ஆசிரியர் தொல்காப்பியனார்செய்யுளியலில் மாத்திரைமுதலாக முப்பத்து நான்குறுப்புக்கூறி அவை நல்லிசைப்புலவர் செய்யுளுறுப்பெனவும், அவை தொடர்ந்த தொடர்நிலை அம்மை முதலிய எண்வகையால் தொடர்நிலைச் செய்யுட்குவனப்பாமெனவும் பகுத்தோதி யனவெல்லாம் செய்யுட்கு அணியாமென்பதும், அவ்விலக்கணங்கட்கு மாறுபட்டன வெல்லாம் குற்றமாமென்பதும் உணர்ந்து கொள்ளவைத் தார். ஆதலின் செய்யுட்கு அணியாவன இவையெனவும் குற்றமாவன இவையெனவும் தனித்தெடுத்துக் கூறவேண்டிய இன்றியமையாமைதொல்காப்பியனார்க்கு இல்லையென்பதாம்.

ஆய்வுரை

இது, பொருள்கோள்வகையுள் ஒன்றாகிய நிரனிறைப்பொருளில் உவமம் வருமாறுணர்த்துகின்றது.

(இ-ள்) உவமையமைத்தற்கு ஒவ்வாவெனவிலக்கும் நிலையில் அமைந்த சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என்னும் பொருள்கோள் மூன்றுமல்லாத நிலைக்கண், உவமயையும் நிரற்பட நிறுத்திப் பொருளையும் நிரற்பட நிறுத்தி உவமஞ்செய்யின் அது நிரல் நிறை யுவமம் எனப்படும். எ-று.

வரைநிலைவைத்த சுண்ணம் (முதல்) மூன்றலங்கடை நிரல் நிறுத்து அமைத்தல் நிரல் நிறை என இயைத்துப்பொருள் கொள்க. சுண்ணம்-பொடி. சிதர்ந்துள்ள பொடிபோன்று சொற்கள் சிதர்ந்து கிடப்ப அவற்றையியைத்துப் பொருள் கொள்ளப் படுதலின் சுண்ணம் எனப்பெயர் பெற்றது. சுண்ணம் என்பது, நாற்சீரடி இரண்டின்கண் அமைந்த எண்சீர்களைப் பொருள் இயைபறிந்து கூட்டியுணரும் பொருள்கோள். எனவே, இதன்கண் உவமையும் பொருளும் வேறுவேறு நிற்க உவமஞ் செய்தல் பொருள் புலப்பாட்டுக்கு ஒவ்வாது. இனி அடிமறியென்பது, செய்யுளின் ஒவ்வோரடியிலும் உள்ள சீர்கள் மாறாது நிற்கச் செய்யுளின் அடிகள் மட்டும் முதலும் இடையும் மறிந்து பொருள் கொள்ளப்படுதல். இங்ங்னம் அடிகள் முன்பின்னாக மாறும் நிலையில் ஒரடியில் உவமங்கூறிப் பிறிதோரடியில் உவமேயத் தினை வைத்தால் பொருள் இனிது விளங்காது. மொழிமாற்று என்பது, செய்யுட்களில் முன்னும் பின்னும் அமைந்த சொற்களைப் பொருள் இயையும்படி இடம் மாற்றிப் பொருள் கொள்ளுதல். ஒரடி