பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் -நூற்பா கடு டுக.

"செந்தீ யோட்டிய வஞ்சுடர்ப் பருதி' 'கண்ணோடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை’ எனவரும். (கடு)

பேராசிரியம்

இது, முறையானே மெய்யுவமத்திற்குரிய வாய்பாடு கூறு கின்றது.

(இ - ல்) இவ்வெட்டும் மெய்யுவமம் (எ - று).

நீர்வார் நிகர்மலர் கடுப்ப’’ (அகம்.11)

மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப’’ (அகம்.5)

வேய்மருள் பணைத்தோள் வில்லிழை ஞெகிழ’ (ஐங்குறு.8)

' உரல் புரை பாவடி' (கலி.21)

'முத்துடை வான்கோ டொட்டிய முலைமிசை”

'பாம்புரு வொடுங்க வாங்கிய நுசுப்பின்’

செந்தி யோட்டிய வெஞ்சுடர்ப் பரிதி'

'கண்ணொடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை’’ என இவை ஒதிய முறையானே மெய்யுவமத்துக்கண் வந்தவாறு.

இவற்றை உரிமைகூறிப் பெருவரவினவெனவே, ஒழிந்தன வுஞ் சிறுபான்மை வருமென்பது உம் அவை பொதுச் சூத்திரத்தான் அடங்குமென்பது உங் கொள்க. அவை :

'கடல்போ றோன்றல காடிறந் தோரே' (அகம். 1)

'அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி’ (அகம். 11)

"புலிசெத்து வெரீஇய புகர்முக வேழம்' (அகம் . 12)

'சேயித ழனைய வாகி’’ (அகம்.19)

"மாணெழில் வேய்வென்ற தோளசய்நீ வரிற்றாங்கும்”(கலி 20)

'கண்போன் மலர்ந்த சுனையும்’

"நறுமுல்லை நேர்முகை யொப்ப நிரைத்த’ (கலி.22)