பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் தொல்காப்பியம்-பொருளதிகாரம்

விளைத்த பயத்தோடு உவமித்தலின் மழையோடு ஒருவனை ஐயஞ் செய்தல் வேண்டுவதின்மையானும், வடிவுகண்டவழி ஐயம் பிறக்குமா கலானும், உருவென்பது குணமாகலாற் பொருள்வேற்றுமை அறிந்த வழி ஐயஞ்செல்லாதாகலானும், மெய்க்குரிமை கூறினானென்பது எய்த்தலென்பது உம் பொருந்துதலாகலின் வடிவிற்கேற்கும் மருள புரைய ஒட்ட ஒடுங்க என்பவுைங் கடுத்தல்போலும் பொருண்மைய; என்னை? மருட்சியும் புரையுணர்வுங் கவர்த்தலைக் காட்டுதலாலும், ஒட்ட ஒ டு ங் க என்பனவும் இரண்டனை ஒன்றென்னும் பொருண்மையவாகலானுமென்பது, நி க ர் த் த லு ம். அவ்வினப் பொருளென்பதனைக் காட்டுதலின் வடிவிற்கேற்றது. ஒடவென்பதும் ஒடுதற்றொழில் வடிவிற் கல்லதின்மையின் அவ்வடிவிற்கேற்றது. பண்பாயிற் பண்பு நிறப்பண்பு ஓடிற்றெனலாகாமையின்.

இனி, உருவுவம லாய்ப்பாட்டிற்குங் காரணங் கூறுங்காற் போலுமென்பது இடைச்சொல்லாகலானும், மரீஇவந்த வினைப்பாற் பட்டதாகலானும், அதற்குக் காரணங் கூறப்படாதென்பது. அஃதேல் அதனை இவ்வெட்டம் கும் முன்பு கூறியதென்னை, பொருளுடைய வற்றைப் பிற்கூறி யெனின், அதுவும் அன்னவென்பதுபோல மற்றை மூன்று உவமத்தும் பயின்றுவருமென்பது எய்துவித்தற்கென்பது. மறுப்ப ஒப்ப என்பன முதலாயினவும் ஒரு காரணமுடையவென்பது ஆசிரியன் பெருவரவினவாக உரிமைப்படுத்துக் கூறினமையின் அறிந்தாம். அல்லது உம் மரபிற் றோன்றும் என்றதனான் இவையெல்லாம் மரபுபற்றி அறியல் வேண்டும் எனவே, தலைச் சங்கத்தார் முதலாயினார் செய்யுட் களுள் அவ்வாறு பயின்று

1. 'கடுப்ப" என்னும் உருபு மெல்யுவமத்திற்குரியதாகக் கறப்பட்டது. கடுச்தல் என்பது ஐயுறுதல், ஐயம் என்பது வடிவு கண்டவழி பிறப்பது. எனவே இவ்வுருபு மெய்யுவ மத்திற்குரியது. வினை யுவமம்பற்றிப் புலியொ டு மறவனை புவமிக்

குங்கா லும் ஒருவன து கோடைப்பயனை மழையின் வினை வினொடு உவமிக்குங்

காலு: வடிவுபற்றி ஐபஞ்செய்தல் வேண் டாமையானும், பொருளின் குணமாகிய உருவு கண்ட நிலையில் ஐயக்தே ன் அதற்கிட மீன் யைாலும், கடுப்பு என்னும உருபு மெய் புவமத்திற்கேயுரியதாயிற்று. எய்த்தல் - பொருந்துதல், வடிவொடு பொருங்துதல் மெய்யுவமத்திற்குரியதா கல. இம் மருள , புதைய என்பன இதுவோ அதுவோ என இ ன் டுற ஐயுறுதலைக்காட்டுதலானும் ஒட்ட ஒடுங்க என்பன உவமமும்பொருளும் அடிவால் ஒன்று என்றும் பொருண்மையுவ கலாலும் கிகர்த்தல் அவ்வினப்பொருள், என்பதனைக் காட்டுதலானும் ஓ - என்பதன் ஓடு தற்றொழில் வடிவிற்கன்றி நிறப்

பின் பிற்கின்மையாலும் இவ்வுருபுகள் மெய்யுவமத்திற்கு உரியவாயின.