பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# : தொல்காப்பியம்-பொருளதிகாரம்

இதனது பயன் :- ஒதிய வாய்பாடு எண்ணான் கற்கும் இன்ன வாய்பாடும் இன்ன வாய்பாடும் ஒரு பொருளவென்று அறிதலுந் தத்தம் மரபிற் பொருள் தோன்ற வருமென்பதும் இடைச்சொல் லென்றலும் ஒப்பில் வழியாற் பொருள் செய்யினும் இ ைடச்சொல் லாகா, தெரிநிலைவினை உருபாயினும் என்பதறிவித்தலு மெனக் கொள்க. மேல் வருகின்றனவற்றிற்கும் இஃதொக்குமென்பது, *

இனிப், பயவுவமை வாய்பாடு எட்டனுள்ளும் எள்ள பொருவ கள்ள வெல்ல என்னும் நான்கும் உவமத்தினை யிழித்தற் பொருள வாகி ஒன்றா யடங்கும். என்னை? மழையைப் பொரீஇச் சொல்லு தலும் அதனது தன்மைக்குணங் கள்ளப்படுதலும் வெல்கையும் அதனை எள்ளுதலும் போல்வன இழிவினையே காட்டுதலின். இனி விழைய புல்ல மதிப்பு வீழ என்னும் நான்கும் உவமிக்கப்படும் பொருளினை உயர்த்தாமையானும் உவமத்தினை இழித்துக் கூறாமையானும் அவை நான்கும் ஒரு பொருளெனப் பட்டன. இவ்வாற்றாற் பயவுவமை யெட்டும் (289) இரண்டாயின வென்பது*

மெய்யுவமை இரண்டாங்கால்-ஐயப்பொருட்கண் நான்குத் துணிபொருட்கண் நான்குமென இாண்டாம். கடுப்ப மருளபுரைய ஒட என்னும் நான்கும் ஐயப்பொருளவாகி ஒன்றாம். ஒடவென்பது உவமத்தின் கண்ணும் பொருளின் கண்ணும் உணர்வு கவர்ந்தோடிற் றென்னும் பொருள் தோன்றவும் சொல்லின் அதுவும் ஐயமெனப் பட்டது போலும். இனி எய்ப்ப ஒட்ட ஒடுங்க நிகர்ப்ப என்னும் நான்கும் ஐயமின்றி உவமையும் பொருளும் ஒன்றென உணர்வு தோன்றும் வாய்பாடாகலின் இவை நான்கும் ஒன்றெனப்பட்டு இவையெட்டும் (290) இரண்டாயின."

இனி, உருவின் (291) கண்ணும் போல ஒப்ப நேர நளிய என்னும் நான்கும் மறுதலையின்றிச் சேர்ந்தனமென்று கோடற்கு வாய்பாடாகி வருதலின் அவை ஒன்றெனப்பட்டன.

1. பயவுவம வாய்பாடுகள் எட்டனுள் எள்ள பொருவ, கள்ள, ஷெல்ல என்னும் நான்கும் உவமிக்கப்படும் பொருளின் உவமம் தாழ்ந்தது என்னும் பொரு :னை புடையவாய் ஒரு கூ றா படங்கும். விழைய, புல்ல. மதிப்ப, வீழ என்னும் க: ன் கும் . வமிக்கப்பட்ட பொருளையுயர்த்துதலும் உவமையைத் தாழ்த்தலுமின்றி அவையிரண்டும் தம் முள் ஒத்தனவென்ற பொருளினையுடையவாய் ஒரு கூறா படங்கும்.

2 பெய்யுவம வாய்பாடுகள் எ ட் டனுள், கடுப்ப, மருள புரைய. ஒட ன் னும் கான் கும் ஐயப்பொருளாய் ஒரு கூறாய டங்கும். எய்ப்ப, ஒட்ட, ஒடுங்க, கி கர்ப்ப

என்னும் துணிபொருளாய் ஒருகூ றாயடங்கும்.