பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா உம் జీ: శ్రీ

'நீருட் குவளைவெந் தற்று’ (கலி 41) என்பது, பெருமை பற்றியது. என்னை உலகநடை யிறந்ததோர் உவமை கூறி

அதனோடு தலைமகன் ஈரத்தினை ஒப்பித்தமையின்.

'களவுடம் படுநரிற் கவிழ்த்து நிலங் கிளையா’’ (அகம்.16)

என்பது, தனக்கு நிகராமல் இழித்துரைத்தமையிற் சிறுமைபற்றி வந்ததாம்.

உவமையும் மெய்ப்பாடும் பொருள்களை அறிவிப்பனவாகி அவை வேறுவேறு பொருள் அறிவித்தலின் ஒத்து வேறுபாடு உடையன வாயினுஞ் சிறுபான்மை மயங்கியும் வருமென்றற்கு இது கூறவேண்டியதென்பது. (க.க)

ஆய்வுரை

இஃது, உவமைக்குரியதோர் மரபுணர்த்துகின்றது.

(இ-ள்) பெருமைபற்றியுஞ் சிறுமைபற்றியும் ஒப்புமைகொள்ளப் படும் உவமைகள் நகைமுதல் உவமையிறாகச் சொல்லப்பட்ட எண் வகை மெய்ப்பாடுகளின் வழியே புலப்படத் தோன்றுமென்று கூறுவர் அறிஞர். (எ - று)

எனவே, எண்வகை மெய்ப்பாடுகள் பற்றியும் உவமை எட்டெனப்படும் என்பதாயிற்று.

ධූ ෆි உவமப் பொருளின் உற்ற துனருந்

தெளிமருங் குளவேதிறத்திய லான,

இளம்பூரணம்

என்-எனின். இதுவும் உவமைக்குரிய வேறுபாடுர்ைத்துதல் துதலிற்று.

(இ-ள்.) உவமப்பொருளாலே சொல்லுவான் குறிக்கப்

பட்ட பொருளை யுணருந் தெளியும் பக்கமும் உள கூறுபாட்டிய லான் என்றவாறு,