பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா உல் 石r密

பேராசிரியம்

இஃது, எய்தாததெய்துவித்த துதலிற்று உவமையோடு பொருள் ஒவ்வாதனவும் ஒப்புமை சார்த்திக் கொள்ளுமா றுணர்த்

தினமையின், !

(இ - ள்) உவமப்பொருளின் - உவமையெனப்பட்ட பொரு ளான்; இன் உருபு ஆன் உருயின்கண் வந்தது; உற்ற துணருந் தெளிமருங்குள -உவமிக்கவரும் பொருட் குற்றதெல்லாம் அறிந்து துணியும் பகுதியுமுள; திறத்தியலான-அங்ங்னந் துணியப்படும் பொருட்டிறம் பலவாகிவரும் இலக்கணவகையான் (எ- று) .

அப்பகுதி பலவும் உற்றுணராமற் சொல்லியவழியும், அஃது உணரவருமென்பது கருத்து, திறத்தியலான’ எனப்பட்ட பகுதியா வன; மேற்கூறப்பட்ட மெய்ப்பாடெட்டும் பற்றி உவமங்கொள்ளுங் கால், உற்றதுணருந் தெளிமருங்கென உவமானவடைக்கு உவமேய வடை குறைந்து வருவனவும் யாதும் அடையின்றி வருவனவுமென்று இவ்விரண்டும் உற்றுணராமற் சொல்லிய வழி, அவற்றுக்கும் உவமைப் பொருளே தெளிமருங் காமெனவும் வாளாதே உவமஞ்செய்து உற் றுணர்த்தாதவழியும் அதுவே தெளிமருங்காமெனவும் இன்னோரன்ன கொள்க.

உதாரணம் :

களவுடம் படுநரிற் கவிழ்ந்து நிலங் கிளையா’’ (அகம். 16

என்றவழிக் கண்டோர்க்கெல்லாம் பெருநகையாகக் களவுண்டாகப் படுநரிற் கவிழ்ந்து நிலங்கிளையாவென உற்றதுணரக் கூறியதில னாயினுங் கையொடுபட்ட களவுடையார்போல நின்றாளென்னும் உவமப்பொருளானே எள்ளுதற்பொருள் தோன்றிநகை புலப்படுவ தாயிற்று.

"சாறுதலைக் கொண்டெனப் பெண்ணிற் றுற்றென

பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக் கட்டி னிணக்கு மிழிசினன் கையது போழ்துரண் டுசியின் விரைந்தன்று மாதோ ஊர்கொள வந்த பொருநனொடு ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே'

1. உவமையொடு பொருட்கு ஒப்புமை விரித்துக் கூறப்படாதனவும் உவமத் திற்கு உற்ற திறத்தியல்கொண்டு உவமேயத்திற்கும் ஒப்புமை சார்த்தியுணர்ந்து கொள்ளப்படும் என எய்தாதது எய்து விக்கும் கிலையில் அமைந்தது இச்சூத்திரம் என்பது பேராசிரியர் கருத்தாகும்.