பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

என்னும் பாட்டினுள் உவமப்பொருளாகிய போழ் தூண்டுசிக் குப் பல அடைகூறி அதனோடு உவமிக்கப்படும் போர்த்தொழி

- ! 6 گم ہبّس - ggr - லினை யாதுமோர் அடையின்றி வாளாது கூறினானாயினும் உவ மப்பொருளானே போர்த்தொழிற்குற்றதும் உணரக்கூறினானாம். என்னை ? உண்டாட்டுங் கொடையும் உரனொடு நோக்கி மறுத்தலும் முதலாகிய உள்ளக்கருத்தினால் ஒரு கணத்துள்ளே பல வேந்தரை ஒருங்கு வேறற்கு விரைகின்றது போர்த்தொழிலென்பது தெளியப்

பட்டமையின்.

“உழுத தோன்பக டழி தின் றாங்கு

நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே” (புறம். 125)

எனவும்,

'மருந்துகொண் மரத்தின் வாள்வடு மயங்கி (புறம். 180)

என்றாற்போல்வனவும் அவை,

இனி, வாளாதே உவமஞ்செய்து உற்றதுணர்த்தாத வழித் தெளியுமாறு : -

'உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்

கச்சாணி யன்னா ருடைத்து’’ (குறள், 667)

என்பதனுள் ; அவன் செய்கைவன்மை கூறாராயினும் அச்சாணி யென்று உவமப்பொருள் தானே அச்செய்கைவன்மை கூறிற்று.

வேனிற் புனலன்ன நுந்தையை நோவார் யார்’ (கலி.85)

என்பதும் அது. ஒழிந்தனவு மன்ன.

இனி, உவமத்தின் உற்றதுணர்கவென்னாது பொருளென்ற தனாற் பொருட்கு அடுத்த அடையும் உவமவடைக்கேற்றது உன்