பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்

பொருளதிகாரம்

உவமையியல்:

معمwwسمتهماعی-مجتمی جمعجم

இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், உவமையியல் என்னும் பெயர்த்து. ஒருபுடை ஒப்புமைபற்றி யுவமை உணர்த் தினமையாற் பெற்ற பெயர். மெய்ப்பாடு பற்றித் தோன்றி

வழங்குவது."

இதனாற் பயன் என்னை மதிப்பதோவெனின், புலன் அல்லாதன புலனாதலும் அலங்காரமாகிக் கேட்டார்க்கின்பம் பயத்தலும். ஆப் போலும் ஆமா எனவுணர்த்தியவழி,அதனைக் காட்டகத்துக் கண்டான் முன் கேட்ட ஒப்புமைபற்றி இஃது ஆமாவென்று அறியும். “தாமரை போல் வாள்முகத்துத் தையலிர்’’ என்றவழி அலங்காரமாகிக் கேட் டார்க்கு இன்பம் பயக்கும்.அஃதாவது மேற்சொல்லப்பட்ட எழுதிணை யினும் யாதனுள் அடங்கும் எனின், அவையெல்லாவற்றிற்கும் பொது வாகிப் பெரும்பான்மையும் அகப்பொருள் பற்றி வரும்.

  • "உவமவியல்" என்பது பேராசிரியர் கொண்ட பாடம்
  • உவமத் தோற்றம் - பா.வே.

1. புடை - பக்கம் : பகுதி. ஒருபுடையொப்புமையாவது ஒரு பொருளின் வினை பயன் மெய் உரு முதலியவற்றால் ஒருபகுதியொத் திருத்தல்.

2. மெய்ப்பாடுபற்றித் தோன்றிவழங்குதலாவது, பொருளின் தோற்றப் பொலிவுகுறித்து மக்களது முகமலர்ச்சிக்கும் ஒளிதிகழ் வனப்புக்கும் செக்தாமரை மலரும் கிறைமதியும் போல்வன ஒப்புமையுடையனவாக உலகமக்கள் பலராலும் பேசப்பட்டு வருதல்,

3. மதித்தல்-கருதுதல். 4. புலன் அல்லா தன-இதுகாறும் பொறிகளால் அறியப்படாத

பொருள்கள். புலனாதல்-விளங்கித் தோன்றுதல். அலங்கா ரமா தல்-அணிபுடை

யதாதல்,