பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் நூற்பா ) நாகூரு

இதனுள் வன்புறை வாயிலாகிய புதல்வனக் கண்டு நகுவாரைத் தனக்கு நகுவாரைப்போல நகா நின்றனெனக் காமக் கிழத் தி கூறி வாயில் நேர்ந்தவாறு காண்க, பகைவரும் நகூஉ' மெனவே தான் புலக்கத்தகுந் தலைவியர் புதல்வனென் நாளாயிற்று. .

(மனையாள் ஒத்தலில் தன்னோர் அன்னேர் மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும்) மனையோள் ஒத்தலில் தானும் உரிமை பூண்டமைபற்றி மனையோளோடு தானும் ஒத்தாளாகக் கருதுதலின்; தன்னேர் அன்ளுேர் மிகைபடக் குறித்த கொள்கைக் சண்ணும் . தன்னை ஒக்கும் ஏனே மகளிரின் தன்னை விசேட முண்டாகக் குறித்துக்கொண்ட கோட்பாட்டின் கண்ணும்:

'குழற்காற் சேம்பின் ............

நேரிறை முன்கை வீங்கியவளேயே ,' (அகம், 336)

இதனுள் யான் அவண் வாராமாறே எனத் தான் பனையோளைப்போல் இல்லுறைதல் கூறி யாண்டுச் செல்லிற் சுடரோடு திரியும் நெருஞ்சிபோல என மகளிரை யான் செல் வுழிச் செல்லுஞ் சேடியர் போலத் திரியும்படி பண்ணிக கொள்வலெனக் கூறியவாறு காண்க,

எண்ணிய பண்ணே - தலைவற்குத் தகுமென்று ஆய்ந்தயாறுங் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்வனபோல்வனவற் ஆக்கண் தாமும் விளையாடுதற்கண்ணும் :

'கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி ' (குறுந்80)

இதனுள், யாமஃதயர்கஞ் சேறும் என விளையாட்டுக்கூறினுள்.

என்று இவற்ருேடு பிறவும்-இக் கூறியவற்றின் கண்ணும் புதல்வற்கண்டு நளிையுவப்பினும் கூற்று நிகழுமென்று கூறப் பட்ட இவ்வெட்டோடே பிற கூற்றுக்களும், கண்ணிய காமக் கிழத்தியர் மேன - இக் கருதப்பட்ட காமக்கிழத்தியரிடத்தன (எ. று)

கூற்றென்பது. அதிகாரத்தான் வருவிக்க; ஒடுவென்றது உருபு கண்ணுதல், ஒரு மனைத் தெருவின்கண் வரிமை பூண்டு இல்லற