பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ர்பியல்-நூற்பா உஉ ாசுக

உஉ அலரில் தோன்றுங் காமத்து மிகுதி1

இளம் பூரணம் :

'ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும் இந் நோய்" (குறள் ககசளர் எனவும் வரும். - . . )ست ستة

அலரில் தோன்றுங் காமத்திற் சிறப்பே' நச்சினார்க்கினியம் : இஃது அலர் கூறியதனாற் பயன் இஃது என் கின்றது.

(இ. ள்.) அலரில்தோன்றுங் காமத்து மிகுதி-இருவகைக் கைகோளினும் பிறந்த அலரால் தலைவற்குந் தலைவிக்குங் காமத்திடத்து மிகுதி” தோன்றும் (எ-று.)

என்றது, களவு அலராகியவழி இடையீட்டிற்கு அஞ்சிய அச்சத்தான் இருவர்க்குங் காமஞ்சிறத்தலுங் கற்பினுட் பரத் தைமையான் அலர்தோன்றியவழிக் காமஞ்சிறத்தலும் அவள்

வருந்துமென்று தலைவற்குக் சாமஞ்சிறத்தலுந் தலைவன் பிரி வின்கட் டலைவிக்குக் காமஞ் சிறத்தலும் பிறவுமாம்.

'ஊரவர் கெளவை' - (குறள். 1147)

'நெய்யா லெரிதுதுப்பே மென்றற்றாற் கெளவையாற்

காம நுதுப்பே மெனல்’’ {குறள் 1148)

என்றாற் போல்வன கொள்க. )أسيك

ஆய்வுரை: இஃது அலரால் விளைவது இது வெனக்கூறு கின்றது.

(இ-ள்) அலர்மொழியால் தலைவன் தலைவி இருவருள் ளத்தும் காமவேட்கை மிக்குத்தோன்றும் எ-று.

1. அலர் காரணமாகத் தலைவன் தலைவி இருவருள்ளத்தும் கர்மவுணர்வு மிக்குத் தோன்றும். -

2. அலரிற் றோன்றுங் காடித்திற் சிறப்பே' என்ற என்றபாடம் கச்சினார்க் கினியர் கொண்ட தன்று என்பது 'காமத்திடத்து மிகுதிதோன்றும்: என்ற அவரது

உரையாற் புலனாம.