பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

கி.அம்

மொழிய ஆராய்ந்த மனையற நிகழ்த்துங் கிழத்திக்கும் உரித் தென்று கூறுப; கவவொடு மயங்கிய காலையான அவன் முயக் கத்தால் மயங்கிய காலத்து (எ . று.)

என்றது, தலைவன் தவற்றிற்கு உடம்பட்டுக் கலங்கினமை கண்ட தலைவி அதற்கு ஆற்றாது தன் மனத்துப் புலவியெல்லாம் மாற்றி இதற்கொண்டும் இணையை யாகலெனத் தழி இக் கொண் டமை கூறிற்று. தலைவன் தன் குண்த்தினும் இவள் குணம் மிகுதிகண்டு மகிழவே தலைவி தன்னைப் புகழ்ந்த குறிப்பு உடைய ளென்பது உங் கொள்க. (க.உ)

ஆய்வுரை : இது தலைவிக்குரியதோர். இயல்புணர்த்து கின்றது.

(இ-ள்) ஈன்ற தாயினைப் போன்று தலைவனை இடித் துரைத்து, அவனது மனக்கவலையை மாற்றி அன்பினால் தழுவிக் கொள்ளுதலும் ஆராய்தலையுடைய மனையறக்கிழமை பூண்ட தலைவிக்கும் உரியதாகும் என்பர்; அவன் தன்னை முயங்கி மகிழுங்காலத்து. எ-று

தாய்போர் கழறித் தழி இக் கோடல் என்றது, தான் பெற்ற மக்கள் அறியாமையாற் குற்றஞ்செய்தவழி அவர்களை வெறுத்து விலக்காது இடித்துரைத்து, மேலும் இத்தகைய குற்றங்களைச்' செய்யற்க’ என்று அறிவுரை கூறி அவர்தம் மனத்துயரை மாற்றி முன்போல் அன்பினால் ஏற்றுக்கொள்ளுதலாகும். 3.

தன் கணவனுக்கு உண்டாகும் நன்றும் தீதும் ஆராய்ந்து தீத சுற்றி நன்றின்பால் . ஒழுகும்படி மனையறம் நிகழ்த்தவல்ல மனைவி என்பார், ஆய்மனைக்கிழத்தி, என்றார்.

கவவொடுமயங்கிய காலை என்றது, தலைவன் முயக்கத் தால் தலைவியுடன் உளங்கலந்து கூடியிருக்கும் காலத்தினை. தாய்போர் கழறுதல் முற்குறித்த வண்ணம் காமக்கிழத்தியர்க் கேயன்றி மனைக்கிழத்தியாகிய தலைவிக்கும் உரியதாகும் என் ப்ரீர் மன்ைக்.கிழ்த்திக்கும் என உம்மை கொடுத்துக் கூறினார்.

حسبب بہمنسمیٹنیسی، ممباسہ

1. இதறகாணடும் இனை யை அகல்-இதனால் வருத்தமுறுவாபல்லை யாகுக , . -