பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

经、袋。 தொல்காபபியம்-பொருளதிகாரம்

புடைய கல்விகருதிப்பிரியுங் காலம் மூன்றாண்டாகிய எல்லை யைக் கடவாது எ~று.

வேண்டிய கல்வி-வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண் டப்படுவதாய சிறப்பு முறைக்கல்வி. இறத்தல்-கடத்தல்.

தலைவியுடன் கூடி இல்வாழ்க்கைக் கடமையினை மேற் கொண்ட தலைவன், சிறப்புடைய கல்வி கருதிச் சென்றானாயி தும் மூன்றாண்டுகளுக்குமேல் தனக்குரிய மனை வாழ்க்கைக் கிட்மையினை நெகிழ விட்டு மனைவியைப் பிரிந்து வேற்றிடத்தே தங்குதல் கூடாது என அறிவுறுத்தும் முறையில் அமைந்தது இந் நூர்பாவாகும்.

ச.அ வேந்துறு தொழிலே பாண்டின தகமே.

இளம்பூரணம் : இதுவு மது:

வேந்துறு தொழிலாவது பகைதனி வினை,

(இ, ள்.) வேந்தற்குற்றவழி, துரது காவல் என அவ்வழிப் பிரிவிற்கும் ஆண்டினது அகமே காலம் என்றவாறு."

எனவே அறுதிங்கள் முத்திங்கள் எல்லாங் கொள்ளப்படும். (ச.அ.)

நச்சினார்க்கினியம் ; இது வரையறையுடைமையிற் பகை வயிற்பிரிவிற்கு வரையறை கூறுகின்றது.

(இ-ள். வேந்து உறு தொழிலே - இருபெரு வேந்தருறும் பிரிவும், அவருள் ஒருவற்காக மற்றொரு வேந்தனுறும் பிரிவும்: யாண்டினது அகமே . ஒர் யாண்டினுட்பட்டதாம் (எ-று.)

வேந்துறுதொழி லென்பதனை இரட்டுற மொழி தலென்

1. பகைவயிற்பிரிவு என்னாது வேந்துறுதொழில்’ எனப்பொதுப்படக் கூறினமையால். வேந்தற்குற்றுழிகிகழும் பகைவயிற்பிரிவுக்குப் போல வேங்தர் புணியாகிய துாது, காவல் ஆகிய பிரிவுகட்கும் ஓராண்டின் அகமே காலனல்லை எனக் கொண்டார் இளம்பூரணர்.