பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா ச கடு

மேலோர் மூவர்க்கும் வேறு வேறு சடங்கினைக் கட்டிக் கீழோர்க்குங் களவின்றியும் கற்பு நிகழுமெனவுஞ் சடங்கு வேறு வேறு கட்டி னார் எனவே, ஒருவர் கட்டாமல் தாமே தோன்றிய கரணம் வேதநூற்கே உளதென்பது பெற்றாம். ஆயின் சந்தருவ வழக் கத்திற்குச் சிறந்த களவு விலக்குண்டதன்றோ எனின், ஒருவனை யும் ஒருத்தியையும் எதிர்நிறீஇ இவளைக் கொள்ள இயைதியோ நீ' எனவும், இவற்குக் கொடுப்ப இயைதியோ நீ எனவும் இருமுதுகுரவரும் கேட்டவழி அவர் கரந்த உள்ளத்தான் இயைந்த வழிக் கொடுப்ப வாகலின் அதுதானே ஒருவகையாற் கந்தருவ வழக்கமாம், களவொழுக்கம் நிகழாதாயினும் என்பது, கரணம் யாத்தோர் கருத்தென்பது பெற்றாம். இதனானே இயற்கைப்

என அடுத்துவரும் நூற்பாவில், "புதல்வனைப் பெற்று எண்ணெய் தேய்த்து நீ ராடித் தூய்மை பெற்ற தலைவியின் கலனைக் கருதிய தலைவன், அறனாற்றி மூத்த அறிவுடையோர்களாகிய தன் குல முதியோர்களைத் துணையாகக்கொண் டும் அமரகத்து அஞ்சா மறவர்களாய்த் துறக்கம்புக்க தன் குடியின் வீரர்களை எண்ணியும் குழந்தைக்குச் சிறப்புச் செய்தல் உண்டு' என்பதனைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இங்ஙனம் ஆன்றமைக்தடங்கிய கொள்கைச் சான்றோர்களை ஆசறுகாட்சி ஐயர், (குறிஞ்சிப்பாட்டு.17) எனப் போற்றுவர் பொய்யா வாய்மொழிக் கபிலர். பற்றற்றான்பற்றினையே பற்றாகப் பற்றி முற்றத் துறக்த தவச் செல்வர் களாய் உலகவுயிர்கள் கதிரவன் வெம்மையால் தாக்குண்டு தளரா வண்ணம் கதிர வனது வெப்பத்தினைத் தம் சடைக் கற்றைகளால் தடுத்து நிறுத்திப் பயிர்கட்கும் உயிர்கட்கும் வேண்டிய அளவு கொடுத்தற் பொருட்டு விண்னகத்தே சுடரொடு திரிதரும் முனிவர்களை விண்செலல்மரபின் ஐயர்' (திருமுருகாற்றுப்படை.107) என்ருர் தக்கோர்புகழும் நக்கீரர். சமனரில் இல்லறத்தாரா கிட உலக கோன் பிக ளைப் பெரும் பெயர் ஐயர் (சிலப்-).160) என்பச் சேர முனிவர் இளங்கோவடிகள், அகத்தினையொழுகலாற்றில் தலைவியின் தமையன்மார்களை ஐயர் என வழங்கும் மரபு சங்கச் செய்யுட்களில் பயின்றுள்ளமை பலரும் அறிந்ததே. 'இளமா எயிற்றி இவைகாண் கின் ஐயர், தலைகாளை வேட்டத்துத் தந்த கல் ஆனிரைகள், (வேட்டுவ வரி) என்பது சிலப்பதிகாரம். திருத்தொண்டர்புராண ஆசிரியராகிய சேக்கிழாரடிகள் திருகாளைப்போவார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் முதலிய தலை மைப் பண்புடைய சிவனடியார்களைப் பிறப்பு முறையானன் றிச் சிறப்பு முறையால் ஐயர் என அழைத்துப் போற்றுகின்றார். எனவே ஐயர்' என்னுஞ் சொல் இக் காலத்திற்போல முற்காலத்திற் சாதிப் பெயராய் வழங்கியதில்லையென்பது கன்கு துணியப்படும். எண்ணுாறாண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் நூல்களிலும் கல்வெட்டு க் களிலும் ஐயர் என்பது சாதிப் பெயராக வழங்கப் பெறவில்லை. அங்கனமாகவும் மிகப்பழைய தமிழ்நூலாகிய தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள ஐயர்' என்னுஞ் சொல்லுக்கு இக் காலச் சாதிப் பெயர் வழக்கினையுளத்துட்கொண்டு ஐயர்-ஆரிய மேலோர்' எனப் பொருள் கூறுதல் வரலாற்று முறைக்கு ஒவ்வாத பிழையுரை போதல் திண்ணம்.