பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா

盔上

?».

பண்ணமை பகுதிப் பதினொரு மூன்றும் எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன என்பது - செய்தலமைந்த பகுதியினை யுடைய முப்பத்துமூன் றிடத்தினும் நிகழும் கூற்று மிக்க சிறப் பினையுடைய கிழவோன் மேலன என்றவாறு.

மிக்க சிறப்பினையுடைய கிழவோன் மேலன என்றமையால், மிகாத சிறப்பினையுடையார் மாட்டு இவையெல்லாம் ஒருங்கு நிகழ்தலில என்று கொள்க. செயலமை பகுதி என்றதனான், இவ் விடங்களின் வரும் பொருள் வேறுபாடுகட்கும் இவையே இட மாகக் கொள்க. (கு)

நச்சினார்க்கினியம் : இது பார்ப்பார் முதலிய பன்னிருவருங் (501- 2) கற்பிடத்துக் கூற்றிற்கு உரியராயினும் அவருள் தலைவன் சிறந்தமையின் அவன் கூற்றெல்லாம் தொகுத்துக் களவிற் கூறி யாங்கு முற்கூறுகின்றது.

(இ-ள்) கரணத்தின் அமைந்து முடிந்த காலை - ஆதிக் கரணமும் ஐயர் யாத்த க்ரணமுமென்னும் இருவகைச் சடங்கானும்’

1. பண்ணமை பகுதி.செயல்வகைக் கூறுபாடுபற்றிய பகுதி. முப்பதினொரு மூன்றும் எனத்திருத்திக்கொள்க. "முப்பதினொருமூன்று' என்னுக் தொகை தலைவன் கூற்று கிகழ்த்தற்குரிய இடங்களை எண்ணித் தொகுத்த தொகையாகும்.

2. ஆதிக்கரணம்’ என்றது, வேத நூல் மேலோர் மூவர்க்கும் வகுத்த கரணம் எனவும், 'ஐயர் பாத்த கரணம்’ என்பது, பொய் யும் வழுவும் தோன்றிய பின்னர் இருடிகள் வகுத்த ஆரிடமாகிய கரணம் எனவும் கச்சினார்க்கினியர் பகுத்துரைக்கும் இப்பகுப்புக்குத் தொல்காப்பிய நூற்பாக்களில் ஆதாரமில்லை. இப்பகுப்பு வட நூல் க. தும் கால்வகை வருண வேறுபாடுகளை யுளங்கொண்டு கச்சி இபடகுடபு துர் மு: 翅势 3. り ாைர்க்கினியர் தாமே வகுத்தமைத்துக்கொண்ட புதுப்படைப்பாகும் என்பது, இப்பகதிக்க அமைக் ளம்பூரணருரை யுடன் கச்சினார்க்கினியர் உரையினை இபபகுதிககு அணி 涵 وإيا கு

ஒப்பிட்டு ஆராய்வார்க்கு எளிதிற் புலனாகும்.

‘கரணத்தின் அமைக்து முடிந்த காலை என வரும் தொல்காப்பிய அடிக்கு, 'ஆதிக்கரணமும் ஐயர் யாத்த கரணமும் என்னும் இருவகைச்சடங்கானும் குறைபாடின்றாய் மூன்றிரவின் மு:பக்கம் இன்றி மதியும் கந்தருவரும் அங்கியும் ஆகிய ஆன்றோர்க்கு - அமைந்த வகையாற் பள்ளி செய்தொழுகி கான்காம் பகலெல்லை முடிந்த காலத்து' என கச்சினார்க்கினியர் தாம் வேண்டிய சொற்களையும் கிகழ்ச்சி. களையும் புகுத்தி எழுதிய உரை, அவரது உள்ளத்தில் ஊறிய வைதிகச் சடங்கிணை