பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛。岛、 தொல்காப்பீயம் - பொருளதிகாரத்

சென்ற தேஎத் துழப்பு நனிவிளக்கி யின்றிச் சென்ற தன் னிலை கிளப்பினும் என்பது-தான் சென்ற தேயத்து வருத்தத்தை மிகவும் விளக்கித் தலைவியை யொழித்துச் சென்ற தன்னிைைமல. கிளப்பினும் கூற்று நிகழும் என்றவாறு.

"ஒழித்தது பழித்த......புலத்தியால் எம்மே” எனவரும். -

3.

(அகம். கூக)

அருந்தொழின் முடித்த செம்மற் காலை விருந்தொடு நல் லவை வேண்டற்கண்ணும் என்பது-அரிய வினையை முடித்து வந்த தலைமைக்காலத்து விருந்தினரோடு கூட நல்லவற்றைக் கிளத்தி விருப்பமுறுதற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் காண்க.

மாலை ஏந்திய பெண்டிரு மக்களுங் கேளி ரொழுக்கத்துப் புகற்சிக்கண்ணும் என்பது-தலைவனை எதிர்கொண்டு மங்கல மாக மாலையேந்தி நின்ற பெண்டிரும் மக்களும் கேளிரும் ஒழு கும் ஒழுக்கத்து விருப்பத்தின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

கேளிரும் என்னும் உம்மை எஞ்சி நின்றது. ஈண்டு ஒழுக் கமாவது-சொல்லாது பெயர்ந்தீர் என்றானும், இளமையும் 夺育了拉 மும் நோக்காது பெயர்ந்தீர் என்றானும் கூறி இதற்குக் காரணம் என்னை எனத் தலைவன் வந்துழி அவர் நிகழ்த்தும் நிகழ்ச்சி

உள்ளினெ னல்லனோ......கொளவே. (குறுந்.சுகர்

ஏனைய வாயிலோ ரெதிரொடு தொகை_இ என்பது -பெண் டிரு மல்லாத வாயில்களாயினார் எதிர் கூறும் சுற்றும் தலைவன்

மாட்டு நிகழும் என்றவாறு.

இவை யெல்லாம் காமப்பொருளாகத் தோன்றா; அவர் சேயல் பொருளாகத் தோன்றும்.

உதாரணம் வந்த வழிக் காண்க,