பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா டு f.噶

' வரவு’ என்பது கடைகுறைந்தது.

"தாழிருள்...... மெல்லனையேமே. (குறுந் உண்டு

இது வந்து புகுந்த தலைவன் கூற்று.

அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும் என்பது-தலை வன் பிரிந்துழிப் பெருகிய சிறப்பினும் கூற்று நிகழும் என்றவாறு

கோடல் எதிர்...... இனியே (குறுந். சுஉ) எனவரும்.

பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும் என்பது-தானுற்ற வின்பத்தினைப் பாகற்குக் கூறுதற் கண்ணும் என்றவாறு. "மறத்தற் கரிதால்...... மகிழ்ந்தயர் நிலையே’’

(நற்றிணை. ச.உ)

என வரும்.

காமக் கிழத்தி மனையோ ளென்றிவ ரேமுறு கிளவி சொல்லிய வெதிரும் என்பது - காமக்கிழத்தியும் மனையாளும் என்று சொல்லு மிருவரும் பாதுகாவலாகக் கூறிய கூற்றினெதிரும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு.

இவ்விருவரும் இல்லுறை மகளிராதலின், தலைவன் மாட்டு திகழுமவை இருவருக்கும் ஒக்கும் என்க.

அஃதாவது வழிவந்தவா றென்னை யெனவும் வருத்தமுற்றி ரெனவும் இந்திகரன பல கூறுதல்.

எரிகவர்ந் துண்ட என்றுழ் நீளிடை

அரிய வாயினும் எளிய அன்றே

அவவுறு நெஞ்சங் கவவுநனி விரும்பிக்

கடுமான் திண்டேர் கடைஇ

நெடுமா னுேக்கிநின் உள்ளியாம் வரவே. (ஐங்குறு.க.சுல்)

என வரும்,

1. பிரிந்துழி என்பது பிரீக் துவந்துழி என்றிருத்தலே பொருட்பொருத்த முடையதாகும்.