பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா சு

"எல்லிழாய்,

சேய் நின்று நாங்கொணர்ந்த பாணன் சிதைந்தாங்கே வாயோடி ஏனாதிப் பாடியம் என்றற்றால் நோய்நாத் தணிக்கும் மருந்தெனப் பாராட்ட ஒவா தடுத்தடுத் தத்தத்தா என் பான் மாண

வேய்மென்தோள் வேய்த்திறஞ் சேர்த்தலும் மற்றிவன் வாயுள்ளிப் போகான் அரோ'

எனவும்,

'உள்ளி உழையே ஒருங்கு படைவிடக்

சள் வர் படர்தத் ததுபோலத் தாம்னம்மை

எள்ளுமார் வந்தாரே சங்கு” (கலித். அக.)

எனவும் இவ்வாறு வரும்,

தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கினும் என்பது-தந்தையரை மக்கள் ஒப்பர் என்பதனால் அந்தமில்லாத சிறப்பினையுடைய மக்களைப் பழித்தற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

"மைபடுசென்னி மழகளிற் றோடை’’ என்னும் மருதக்கலியுள்'

"வீதல் அறியா விழுப்பொருள் நச்சியார்க்கு

ஈதன் மாட் டொத்தி பெருமமற் நொவ்வாதி

1, "தந்தையர் ஒப்பர் மக்கள்' என்பது, தொல்காப்பியனார் காலத்தில்

காட்டுமக்கள் எல்லார்க்கும் பொருள்புலனாக வழங்கிய பழமொழியாகும். 'புதல்வர்கள் தத்தமக்குரிய குணஞ்செயல்களால் தம் தங்தையையொத்துக் காணப்படுவர் என்பது இப்பழமொழியாற் குறிக்கப்படும் செய்தியாகும். தாயைப்போலப் பெண், நூலைப் போலச் சேலை என் இக் காலத்து வழங்கும் பழமொழியும் இதனோடு ஒத்த கருத்தில் தோன்றியதாகும். தந்தையரொப்பர் மக்கள்’ என்னும் இப்பழமொழிப் பொருளை வற்புறுத்தும் முறையில் அமைக்ததே, 'தக்கார் தகவிலர் என்ப தவர வர், எச்சத்தாற் காணப் படும்' என வரும் திருக்குறளாகும். தாய்தந்தையாகிய பெற்றோர்களால் தீதொரீஇ நன்றின்பாற் செலுத்தும் கல்ல அறிவுரைகள் தந்து வள்ர்க்கப்பெற்று ஈறில்லாப் பெருஞ் சிதப்பினைப் பெறுதற்குரியோர் அவர்தம் மக்கள் என்பது புலப்பட அந்தமில்சிறப்பின் மக’ எனச் சிறப்பித்தார். தன் கணவன்பாலுள்ள குற்றங்களைப் பெற்றகுழந்தைகள்மேல் ஏற்றிக் கண்டிக்கும் மகளிரது உலகியல்பு புலப்பட மகப்பழித்து கெருங்கல் என்றார், கெருங்கல்-தவறு களை எடுத்துக்கறிக் கண்டித்தல்.