பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் تعني او يلي

நீயா கியர்எம் கணவனை யான் ஆகியர்நின் நெஞ்சுநேர் பவளே

5

(குறுந். சக} என வரும்.

கொடுமை ஒழுக்கத்துத் தோழிக் குரியவை வடுவறு சிறப் பின் கற்பின்திரியாமைக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும்பெட்ட லும் ஆவயின் வருஉம் பல்வேறு நிலையினும் என்பது-தலைவி கொடுமை யொழுக்கத்துத் தோழிக்குக் கூறுதற் குரியவை குற்ற மற்றசிறப்பினையுடைய கற்பின்கண் திரியாது தலைவனைக் காய்த லும் உவத்தலும் நீக்கி நிறுத்தலும் பேணிக்கோடலும் அவ்விடத்து வரும்பலவாய் வேறுபட்டு வரு நிலையினும் தலைவி கூற்று நிகழும் என்றவாறு.

தோழிக்குரியவை என்றதனால் தோழிக்குக் கூறத்தகாதனவும் உள என்று கொள்க.

'நன்னலந் தொலைய நல மிகச் சாஅய்

இன்னுயிர் கழியினும் உரையல் அவர் நமக் கன்னையும் அத்தனும் அல்லரோ தோழி புலவிய தெவனோ அன்பிலங் கடையே.' (குறுந், 93)

இது காய்தல் பற்றி வந்தது.

நாமவர் திருந்தெயி றுண்ணவும் அவர் நம

தேந்துமுலை யாகத்துச் சாந்துகண் படுப்பவுங்

கண்டுசுடு பரத்தையின் வந்தோற் கண்டும்

ஊடுதல் பெருந்திரு உறுகெனப் .

பீடு பெறல் அருமையின் முயங்கி யேனே’’ எனவும்,

காணுங்கால் காணேன் தவறாய காணாக்காற் காணேன் தவறல் லவை' (குறள் . க2.அகர்

எனவும் இவை உவத்தல் பற்றி வந்தன.

4. காய்தல்-வெகுளுதல், உளத்தல்-உனக்துப ராட்டுதல் பிரித்தல்ல

  1. ...ဲ. ၊ ံ ့ ့ ့ ့ီ િ ી જઉં - $o. 4 -* * * - - و "معمر - +. அ. மன க்க நிறுத்தல், பெட்டல்- விரும்பிப்பேனிக் கொள்ளுதல்,