பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புணரியல் 105

   குற்றியலுகரப் புணரியல் 32-ம் சூத்திரத்தில் ஒன்று முதல் ஒன்பதீறாகச் சொல்லப்படுகின்ற எண்ணுப்பெயர்களின் முன் பத்து என்பது வருமொழியாய்வரின், நிலைமொழிகளுள் ஆறு என்னுஞ்சொல் நீங்கலாக ஏனைய எண்ணுப்பெயர்களின் இறுதிக் குற்றியலுகரம் மெய்யொடுங்கெடுமென்றும், 35-ம் சூத்திரத்தில் மூன்று ஆறு என்பவற்றின் முதலிலுள்ள நெட் டெழுத்துக்கள் குறுகுமென்றும், கூறிய ஆசிரியர், ஒன்றுமுதல் ஒன்பான்களின் முன் ஆயிரம் வந்து புணருங்காலும் 32 முதல் 58 வரையுள்ள சூத்திரங்களால் முன்னர்க்கூறிய விதிகளை அவ்வாறே வைத்துக் கொண்டு, அவற்றின் மேலுளவாம் திரிபு களை 58முதல் 63 வரையுள்ள சூத்திரங்களால் கூறுகின்றா ரென்பது அச்சூத்திரங்களின் கிடக்கை முறையால் நன்கு விளங்கும். எனவே “ஆறன் மருங்கிற் குற்றியலுகரம், ஈறு மெய் யொழியக் கெடுதல் வேண்டும்” குற்றியலுகரம்-54) என்னும் இச் சூத்திரத்தாற் குறிக்கப்பட்ட ஆறு என்பது முன்னர் 32, 35-ம் சூத்திரங்களிற் சொல்லிய வண்ணம் அறு’ எனத்திரிந்த வடிவத்தையே குறித்ததெனக் கொள்ளுதல் வேண்டும். இங்ஙனம் அறு எனத்திரிந்து நின்ற காலத்து அதன் இறுதிநின்ற உகரம் முற்றுகரமாகவும் அவ்வாறு திரிதற்கு முன்னுள்ளது குற்றிய லுகரமேயாதலின் குற்றியலுகரந்திரிய நின்ற உகரமே அது வென்பார் ஆறன் மருங்கிற் குற்றியலுகரம் என்றார் ஆசிரியர். இங்ஙனம் கூறியது, திரிந்ததன் திரிபு அது என்னுங் கருத்தினா லென்பதனை இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் நூன் மரபின் முதற் சூத்திர உரையில் நன்கு தெளிவுபடுத்தியுள்ளார் கள். எனவே இச் சூத்திரத்துக் குற்றியலுகரமெனக் கூறப்பட்டது, ஆறு என்னுங் குற்றுகரவீற்றின் திரிபாகிய அறு என்பதன் இறுதி நின்ற முற்றுகரமாதலின், அவ்வுகரம் ஆயிரம் எனவரும் வருமொழி முதலிலுள்ள ஆகாரவுயிர்க்கு இடந்தந்து ஒருங்கு நிற்கும் ஆற்றிலின்றித் தான் ஏறிய றகரமெய்யை விட்டுக்கெட அம்மெய்யின்மேல் வருமொழி ஆகாரவுயிரேறி அறாயிரம் என முடிவதாயிற்று. ஆகவே இச் சூத்திரத்தில் ஈறுமெய்யொழியக் கெடுமெனக் கூறிய விதி, ஆறு என்னுஞ் சொல்லில் இறுதியி லுள்ள குற்றியலுகரத்திற்கு அன்றென்பதும், அதன் திரிபாகிய அறு என்பதிலுள்ள முற்று கரத்திற்கே புரித்தென்பதும் பகுத்துணர்ந்து கோடல்வேண்டும். இங்ஙனமன்றி ஆயிரம் என்னும் சொல் வருமொழியாய் வர ஆறு என்னும் நிலை மொழியிறுதிக் குற்றுகரம் கெடுமென்பதே தொல்காப்பிய தொ 8,