பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொகைமரபு 141



     வேற்றுமை யல்வழி இ ஐ யென்னும் 
     ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய 
     அவைதாம் 
     இயல்பா குநவம் வல்லெழுத்து மிகுநவம் 
     உறழா குதவும் என்மனார் புலவர். (தொல்.158) 
   இஃது இகர ஐகார வீற்றுப் பெயர்க்கு அவ்வழி முடிபு கூறுகின்றது.
   (இ-ள்) வேற்றுமை யல்லாதவிடத்து இ ஐ என்னும் இறுதியை யுடைய பெயர்ச்சொற்கள் மூவகையாகிய முடிபு நிலையை புடைய அம்முடிபுகள்தாம் இயல்பாய் முடிவனவும் வல்லெழுத்து மிக்கு முடிவனவும் உறழ்ச்சியாய் முடிவனவும் என இவையென்று கூறுவர் புலவர்.
   (உ-ம்) பருத்தி குறிது, சிறிது, தீது, பெரிது இவை இயல்பு. மாசித் திங்கள், சித்திரைத் திங்கள், அலிக்கொற்றன், புலைக் கொற்றன் இவை மிகுதி. கிளி குறிது, கிளிக்குறிது, தினை குறிது, தினைக்குறிது இவை உறழ்ச்சி.
   இயல்பு எழுவாய்த் தொடர் உம்மைத் தொகைகளிலும், மிகுதி பண்புத்தொகை உவமைத் தொகைகளிலும், உறழ்ச்சி சில பெயர் முன் எழுவாய்த் தொடரிலும் கொள்ளப்படும்.
   இகர ஐகார வீற்று அவ்வழிக்கண் உண்டாம் இம்மூவகை முடிபுகளையும்,
     அல்வழி இஜம் முன்ன ராயின் 
     இயல்பும் மிகலும் விகற்பமு மாகும் (நன்.175) 

என்பதனாற் கூறினார் நன்னூலார்.

     கட்டு முதலாகிய இகர இறுதியும் 
     எகரமுதல் வினாவின் இகர இறுதியும் 
     கட்டுச்சினை நீடிய ஐயென் இறுதியும் 
     யாவென் வினாவின் ஐயென் இறுதியும் 
     வல்லெழுத்து மிகுநவம் உறழா குநவும் 
     சொல்லிய மருங்கின் உளவென மொழிப. (தொல்,159) 
   
   இஃது எழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்திநின்ற ஐகார ஈற்று இடைச்சொன் முடிபு கூறுகின்றது.
   (இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய இகர வீற்று - இடைச்சொல்லும், எகரமாகிய மொழிமுதல் வினாவினை யுடைய இகர வீற்றிடைச் சொல்லும், சுட்டாகிய உறுப்பெழுத்து