பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

தொல்காப்பியம்-நன்னூல்



   தொல்காப்பியத்துள் மகர வீற்றுக்குச் சொல்லப்பட்ட இச்சிறப்பு விதிகளை,
     மவ்வி றொற்றழிந் துயி றொப்பவும் 
     வன்மைக் கினமாத் திரிபவு மாகும். (நன் 219)

என்ற பொது விதியால் தழுவினார் நன்னூலார்.

   ‘இல்லம் என்ற மரப்பெயர், ஈற்று மகரங்கெட்டு, விசை என்னும் மரப்பெயர் போன்று வல்லெழுத்து முதன்மொழி வரின் அதன் கிளையொற்றாகிய மெல்லெழுத்து மிக்கு முடியும் என்பது,
   இல்ல மரப்பெயர் விசைமர வியற்றே.     (தொல்.313)

என்பதனாற் கூறப்பட்டது.

   (உ-ம் இல்லம்+கோடு-இல்லங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். இல்லம்-தேற்றாமரம்.
   மகரவீற்றுச் சொல்முன் வகர முதன்மொழி வருமிடத்து வகரத்தின் மேல் நின்ற மகரம் அதன் தொடர்பால் தன் மாத்திரையிற் குறுகும் என்பது,
     வகார மிசையு மகாரங் குறுகும். (தொல்.330)
  என்ற சூத்திரத்தால் உணர்த்தப்பட்டது. அரையளவு குறுகல் மகரமுடைத்தே நூன்மரபு 13) என முன்னர்ப் கூறப் பட்ட ஒருமொழி மகரக் குறுக்கத்துள் போன்ம்’ என ஈரொற்றுடனிலையாய் னகரம் நின்று தொடர அதன்முன் உள்ள மகரம் தன் மாத்திரையில் குறுகிக் கால் மாத்திரை யாதலை, னகாரை முன்னர் மகாரங் குறுகும் மொழிமரபு 52 என்பதனாற் கூறினார். அதுவேயன்றிப்புணர்மொழிக்கண் வகரம் வந்து தொடர, அதன்மேல் நின்ற மகரம் குறுகுதல் உண்டென்பார், வகார மிசையும் மகாரங் குறுகும் என ஈண்டுக்கூறினார்.
  (உ-ம்)     தரும் வளவன் எனவும் போன்ம் எனவும்
              வரும் இவ்விருவகை மகரக் குறுக்கங்களையும்,
   ணனமுன்னும் வஃகான் மிசையுமக் குறுகும், (நன் 96)

எனவரும் சூத்திரத்தால் பவணந்தியார் தொகுத்துக் கூறியுள்ளார்.