பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புள்ளி மயங்கியல் 197

       பாழென் கிளவி மெல் லெழுத் துறழ்வே,        (தொல்.387)

என்பதனால் கூறப்பட்டது.

   (உ-ம்)    பாழ்+கிணறு  பாழ்க்கிணறு,    சேரி,   தோட்டம்,   பாடி 
              பாழ்+கிணறு = பாழ்ங்கிணறு, ‘   '         '            '          
   கீழ்’ என்னும் ழகரவீற்றுச் சொல் வல்லெழுத்து முதன் மொழி வருமிடத்து வல்லெழுத்துப் பெற்றும் பெறாதும் உறழ்ந்து முடியும் என்பது,
       கீழென் கிளவி யுறழத் தோன்றும். (தொல். 395)

என்பதனால் விதந்து கூறப்பட்டது.

   (உ-ம்) கீழ்+குளம் = கீழ்க்குளம்,   சேரி,   தோட்டம்,   பா
           கீழ்+குளம் = கீழ்குளம்,    
   ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய யரழ வீற்று வேற்றுமை முடிபுகளாக மேற்காட்டிய அனைத்தையும் நன்னூலாசிரியராகிய பவணந்தி முனிவர்,
       யரழ முன்னர்க் கசதப அல்வழி 
       இயல்பும் மிகலும் ஆகும்; வேற்றுமை 
       மிகலும் இனத்தோ டுறழ்தலும் விதிமேல்.       (நன்.224)
       கீழின்முன் வன்மை விகற்பமு மாகும்.          (நன்.226) 

எனவரும் சூத்திரங்களில் தொகுத்துக் கூயுள்ளார்.

4. இயல்பாய் வருவன

   மூன்று திரிபும் பெறுதலின்றி இயல்பாய் முடியும் புள்ளி பீற்றுச் சொற்களை ஆசிரியர் தொல்காப்பியர் பதினாறு சூத்திரங்களால் எடுத்துரைப்பார்.
   மெய்பிறிதாதற்கு ஏற்புடைய ணளனல என்னும் நான் கீற்றுச் சொற்களுள், ணகர வீற்றுள் ஆண் பெண் எனவரும் விரவுப் பெயரும், ஓர் இனத்தை யுணர நின்ற உமண் முதலிய கிளைப்பெயர்களும், முரண்’ என்னும் தொழிற் பெயரும்; னகர வீற்றுள் குயின் என்பதும், ஓர் இனத்தை யுணர நின்ற எயின் முதலிய கிளைப் பெயர்களும்; தான், பேன்’, ‘கோன்’ என வரும் இயற்பெயர்களும்; நெட்டெழுத்தின் பின்னர் வரும் லக்ார ஈற்றுட் சிலவும் திரியாது இயல்பாவனவாம். இவை இங்ஙனம் இயல்பாதலை,