பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

தொல்காப்பியம்-நன்னூல்


நகரமெய்யோடீறாகா எனவும், அன்றி நவவொடு என்பதற்கு திரனிறையே உகரம் நகரத்தோடும், ஊகாரம் வகரத்தோடும் ஈறாகாவெனவும் இருவகையாற் பொருள் கூறுவர் அரசஞ் சண்முகனார். தொல்காப்பியர் நூலிலேயே களவு என்றாற் போன்ற வகர வுகரவீற்றுச் சொற்கள் பயின்று வருதலால் அரசஞ் சண்முகனார் கூறிய பொருளே சிறப்புடையதாகும்.

      உச்ச கார மிருமொழிக் குளித்தே. தொல், 75 
  (இ-ள்) உகரத்தோடு கூடிய சகரம் உசு, முசு’ எனும் இரு மொழிக்கல்லது பல மொழிக்கு ஈறாகாது.
     உப்ப காரம் ஒன்றென மொழிப 
     இருவயி னிலையும் பொருட்டா கும்மே.     (தொல். 78) 
   (இ~ள்) உகரத்தோடு கூடிய பகரம் தபு எனும் ஒரு மொழிக்கு ஈறாம் என்பர். அச்சொல்தான் தன்வினை பிறவினை என்ற ஈரிடத்தும் நிலைபெறும் பொருண்மைத்தாம்.
   (உ-ம்) தபு, எனவரும் தபு எனப் படுத்துச் சொல்ல நீசா எனத் தன்வினையாம். எடுத்துச்சொல்ல நீ ஒன்றினைச் சாவச்செய் எனப் பிறவினையாம்.
      எஞ்சிய வெல்லாம் எஞ்கத லிலவே.      (தொல், 77) 
  (இ-ள் 7: முதல் 76 வரை விசேடித்துக்கூறியவற்றை யொழிந்தனவும் மொழிக்கிறாகாதென்ற உயிர்மெய்களும் தம் பெயர் கூறும்வழி ஈறாதற்கு ஒழிவில.
      ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள வென்னும் 
      அப்பதி னொன்றே புள்ளி யிறுதி. (தொல், 78) 
   இது, முன்னர் உயிர்கள் ஈறாமாறு கூறி, மெய்களுள் ஈறாவன கூறுகின்றது.
  (இ-ள்) மெய்களுள் ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ், ள், என்ற பதினொன்றுமே மொழிகளுக்கு ஈறாவனவாம்.
  (உ-ம்) உரிஞ், மண், பொருந், திரும், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வேள் எனவரும்.
     உச்ச காரமொடு நகாரஞ் சிவனும். (தொல். 79) 
  
   (இ-ள்) உச்சகாரம் இருமொழிக்கு ஈறாயின வாறு போல நகரவொற்றும், பொருந், வெரிந், என்னும் இரு மொழிக்கல்லது ஈறாகாது. எ-று.