பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பொருளின் இத்தன்மைத்து இப்பொருள் என்னும் பொருண் மையை உணர்த்தும். ஐந்தாம் வேற்றுமைப் பொருள் பொருவும் எல்லேயும் ஏது வும் நீக்கமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் பொரு வென்பது உறழ்பொருவும் உவமப்பொருவும் என இருவகைப் படும். உறழ்தல்-ஒன்றனன் ஒன்றை மிகுத்தல். ஏது ஞாபக வேது காரகவேது என இருவகைப்படும். அவற்றுள் ஞாபக வேது மூன்ரும் வேற்றுமையில் இன் ஆன் ஏது? என்புழிக் கூறப்பட்டது. காரகஏது பின்வரும் சூத்திரத்தில் அச்சம் ஆக் கம் என்பனவற்ருற் பெறப்படும். நீக்கப் பொருண்மை தீர்தல் பற்றுவிடுதல் என்பனவற்ருற் பெறப்படும். பொருவும் எல்லையும் 'இதனின் இற்று இது என்பதற்ை கொள்ளப்படும் என்பர் சேணு வரையர் . எக.ை வண்ணம் வடிவே அளவே சுவையே தண்மை வெம்மை அச்சம் என்ரு நன்மை தீமை சிறுமை பெருமை வன்மை மென்மை கடுமை யென்ரு முதுமை இளமை சிறத்தல் இழித்தல் புதுமை பழைமை ஆக்கம் என்ரு இன்மை உடைமை நாற்றந் தீர்தல் பன்மை சின்மை பற்று விடுதலென் றன்ன பிறவும் அதன் பால வென்மஞர். இஃது ஐந்தாம் வேற்றுமையின் பொருள் வேறுபாடு உணர்த்து கின்றது. (இ-ள்) வண்ணம் முதலாகப் பற்றுவிடுதல் ஈருக ஒதப் பட்டனவும் அத்தன்மைய பிறவும் ஐந்தாம் வேற்றுமைப் பாலன என்று கூறுவர் புலவர். எ-று. வண்ணம் வெண்மை கருமை முதலியன. வடிவு வட்டம் சதுரம் முதலியன. அளவு நெடுமை குறுமை முதலியன. சுவை கைப்பு புளிப்பு முதலியன. நாற்றம் நறுநாற்றம் தீ நாற்றம் முதலியன.