பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 (உ-ம்) அறம்போற்றி வாழ்மின் என்புழி ஒம்படைக் கிளவி இரண்டாம் வேற்றுமைக்குச் சொல்லிய காப்புப் பொருளின் அடங்குதலின், அறத்தைப் போற்றி வாழ்மின் என ஐகார வுருபும், அறம் அவன் போற்றிவருதற்கு ஏதுவாதலுடைமையால் 'அறத்தாற் போற்றி வாழ்மின்’ என ஆனுருபும் ஒத்தவுரிமை யாய் வந்தன. இவை பிரிவில? எனவே இன்னுருபு பிரி வுடைத்தாய், புலியிற் போற்றிவா எனச் சிறுபான்மை வரும் என்பர் சேனவரையர், கஅை. ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக் கேழு மாகு முறை நிலத் தான. இஃது ஆருவதும் ஏழாவதும் மயங்குமாறு கூறுகின்றது. (இ~ள்) ஆரும் வேற்றுமைக்குச் சொல்லப்பட்ட வாழ்ச்சிக் கிழமைக்கு உறைநிலமாயவழி ஏழாவதும் வரும். எ-று. உறையும் நிலத்தின் கண் ஏழுமாகும் எனவே உறை நிலமல்லாத பெயர்க்கண் ஏழாமுருபு வாராது என்பதாம் . (உ-ம்) காட்டியானே என்பது காட்டதியானே யென ஆருவது வருதலேயன்றிக் காட்டின்கண் யானே எனச் சிறு பான்மை ஏழாவது வரினும் அமையும் என்ற வாறு. யான்ேக்காடு, நம்பியூர் என உறைநிலமல்லாத பெயர்க் கண் ஆருமுருபு விரிதலன்றி ஏழாமுருபு விரியாதென்பதாம். கூகூ. குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி அப்பொரு ளாறற் குரித்து மாகும். இது நான்காவதன் பொருள் ஆருவதற்குச் செல்லுமாறு கூறுகின்றது. (இ-ள்) குவolவனனும் உருபு தொகவரும் கொடையெதிர் கிளவியாகிய தொகையின் அப்பொருண்மை ஆரும் வேற்று மைக்கு உரியதுமாகும். எ-று.