பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 362. இரண்டு முதலா மிடையா றுருபும் வெளிப்பட லில்லது வேற்றுமைத் தொகையே. என வேற்றுமையுருபுகள் இடையிற் ருெகுதலொன்றையே வேற் றுமைத் தொகைக்குரிய இலக்கணமாகக் கூறினர் பவணந் தியார். இரண்டாம் வேற்றுமையுருபாகிய ஐகார முதலாகக்கண் ஈருக நின்ற ஆறுருபும் இடையே தோன்ருது தொக்கு நிற்பது வேற்றுமைத் தொகையாம், என்பது இதன் பொருள் . ளசு. யாத னுருபிற் கூறிற் ருயினும் பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும். இஃது உருபு மயக்கமாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ஒரு தொடர் யாதானுமோர் வேற்றுமையின் உருபு கொடுத்துச் சொல்லப் பட்டதாயினும், அவ்வுருபு தன் பொருளால் அத்தொடர்ப் பொருள் செல்லாதவழிப் பொருள் செல்லும் பக்கத்து வேற்றுமையைச் சாரும். எ-று. பொருள் செல்லாமையாவது உருபேற்ற சொல்லாகிய நிலேமொழியும் உருபுநோக்கிய சொல்லாகிய வருமொழியும் தம்முள் இயையாமை. பொருள் செல்லும் பக்கத்து வேற்றுமை யைச் சார்தலாவது பொருளுக்கியைந்த உருபாகத் திரித்துக் கொள்ளப் பெறுதல். (உ-ம்) கிளேயரி நாணற் கிழங்கு மணற்கீன்ற முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்’ என்றவழி, மணற்கு: என்னும் குவ்வுருபேற்ற சொல்லும் ஈன்ற” என்னும் உருபு நோக்கிய சொல்லும் தம்முள் இயையாமையின் மணற்கு என்னும் நான்காமுருபு மணற்கண் என ஏழாவதன் பொருளில் வந்தவாறு கண்டு கொள்க. இவ்வாறு உருபு தன் பொருளிற் றீர்ந்து பிறவுருபின் பொருட்டாய் நிற்றல் உருபு மயக்கம் எனப்படும். உருபுமயக்க முணர்த்திய இத்தொல்காப்பியச் சூத்திரத் தைப் பவணந்தி முனிவர்,