பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தண்டசக்கர முதலாயினவும், வனையப்பட்ட குடத்தைக் கொள்வானும் வனேந்ததனன் ஆயபயனும் என்னும் எட்டுக் காரணத்தாலும் அத்தொழில் நிகழ்ந்தவாறு காண்க . வனந்தான் என்பது, வனைதலேச் செய்தான் என்னும் பொருளதாதலின், செய்தற்கு வனைதல் செயப்படு பொருள் நீர்மைத்தாய்க் காரகமாயிற்று. இன்னதற்கு, இது பயனுக என் னும் இரண்டும் அருகியல்லது வாராமையின், அன்னமரபின் இரண்டொடும்? என அவ்விரண்டினேயும் பிரித்துக் கூறினர். வேற்றுமையியலில் இரண்டாம் வேற்றுமைக்கு ஒதிய பொருளெல்லாவற்றையும் செயப்படுபொருள் என ஒன்ருகத் தொகுத்து, அங்குக் கூறிய ஏதுவைக் கருவிக்கண்ணும், வினை செய்யிடத்தைக் காலத்தின்கண்ணும் அடக்கி வினைமுதல், செயப்படு பொருள், கருவி, நிலம், காலம், இன்னதற்கு, இது பயனக என ஏழாகச் செய்து, அவ்வியலிற் பெறப்படாத வினே யென்னும் முதனிலையைக் கூட்டித் தொழின் முதனிலே எட்டென் ருர் . இதற்ைபயன் நிலனும் பொருளுங் காலமுங் கருவியும்? எனவும் செயப்படு பொருளைச் செய்தது போல’ எனவும் வினைக்கிலக்கணங் கூறுதலும் பிறவுமாம் என்பர் சேவைரைய்ர். இனி, வனைந்தான் என்பதன்கட் செய்வது எழுவாயா யும், வினையும் செயப்படு பொருளும் இரண்டாவதாயும், வினை முதலும் கருவியும் மூன்ருவதாயும் ஒருவன் ஏற்றுக்கொண்ட வழி இன்னதற்கு இது பயன் நான்காவதாயும், நிலமும் கால மும் ஏழாவதாயுஞ் சேர்ந்தன. இன்னும் வனந்தவன் கொடுத்த குடம் அவன் கையினின்று நீங்குதல் ஐந்தாவதாயும், அதனை ஒருவன் ஏற்றுக் கொண்டவழி அஃது அவனுடைமையாதல் ஆருவதாயும் சேருமாறு உணர்க. கருவிக்கண் அடங்கும் ஏதுவும் ஐந்தாவதற்கு வரும். இங்ங்னம் இவ்வுருபுகள் இவ் வினேச்சொற்கட்டோன்றுதல் பற்றி இச்சூத்திரத்தை வினையிய லிற் கூருது ஈண்டுக் கூறினர். என நச்சிஞர்க்கினியர் கூறிய விளக்கம், தொழின் முதனிலேகளாகிய எட்டிற்கும் வேற்றுமைப் பொருள்கட்கும் இடையேயமைந்த தொடர்பிஜன. யும் இச்சூத்திரம் வேற்றுமைப் பொருள் மயக்கமுணர்த்தும் இவ்வியலில் இடம் பெறுதற்குரிய காரணத்தினையும் நன்கு புலப்படுத்துதல் காணலாம். வேற்றுமைகளே முடிக்குஞ்