பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பெயரியல் கிளவியாக்கம் முதல் விளிமரபீருக அல்வழி வேற்றுமை யாகிய தொடர்மொழி யிலக்கணங் கூறிய ஆசிரியர், இனி அத் தொடர்மொழிக் குறுப்பாகிய தனிமொழியிலக்கணங் கூறத் தொடங்கி முதற்கண் பெயரிலக்கணம் உணர்த்துகின்றர். அதளுல் இது பெயரியலென்னும் பெயர்த்தாயிற்து. இதன்கண் 48-சூத்திரங்கள் உள்ளன. இவற்றை 41-சூத்திரங்களாக அடக்குவர் தெய்வச்சிலேயார். ளடுடு. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே. இது, நால்வகைச் சொற்கும் பொதுவிலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) பெயர்ச்சொல், வினேச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய எல்லாச் சொல்லும் பொருள் உணர்த்துதலேக் கருதியே நிற்கும்; பொருளுணர்த்தாது நில்லா. எ-று. சொல் பொருள் குறித்தன என்றது, இவ்வாள் வெட்டியது என்ருற்போன்று கருவிக்கருத்தாவாய் நின்றது. ஆயிருதிணே பின் இசைக்குமன சொல்லே? என் புழி, இருதிணேப் பொருள் களேயும் சொற்கள் உணர்த்தும்’ என்பதன்றித் தமிழ்ச் சொல் லெல்லாம் பொருளுணர்த்தியே நிற்பன என்னும் வரையறை ஆண்டுப் பெறப்படாமையின் அதனை இச்சூத்திரத்தால் ஆசிரியர் தெளிவுபடுத்தினர். தாம்சார்ந்த சொற்களின் பொருளையுணர்த்தியும் அச்சொற்களே அசைத்தும் நிற்றலின் அசை நிலையும் பொருள் குறித்தனவேயாம். சொற்கள் ஒசை நிறைந்து நின்றே பொருளுணர்த்த வேண்டுதலின் இசை நிறையும் பொருளுணர்த்திய தெனவே கொள்ளப்படும். முயற் கோடு, யாமை மயிர்க்கம்பலம் என்ருற் போல்வனவும் பொய்ப் பொருளாகிய அவற்றின் இன்மையைக் குறித்து நின்றன வாதலின் அவையும் பொருளுணர்த்தினவேயாம்.