பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 சொல் வினைச்சொல் எனப்பட்டது. பொருளது புடை பெயர்ச் சியாகிய தொழில் பற்ருது அப்பொருள் பற்றிவரும் சிறப்புடை மையாற் பெயரை முற் கூறினர். ள கூடு. இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் டு. இ ፲0 Ա! ற | அவற்றுவழி மருங்கிற் ருேன்று மென்ப. இதுவும் அது. (இ ள்) இடைச் சொல்லும் உரிச் சொல்லும் பெயரையும் வினேயையும் சார்ந்து அவற்றினிடமாகத் தோன்றும். எ-று. பெயருமாகாது வினேயுமாகாது அவ்விரண்டற்கும் நடு நிக ரனவாய் நிற்பன இடைச் சொற்களாம். இடை - நடு. குணப்பண்பும் தொழிற்பண்புமாகிய பொருட்பண்பையுணர்த் துஞ்சொற்கள் உரிச்சொற்களாகும். பொருட்குப் பண்பு உரிமை பூண்டு நிற்றலின் அப்பண்பினை யுணர்த்துஞ்சொல் உரிச்சொல் எனப்பட்டது என்பர் சிவஞான முனிவர். இடைச் சொல்லும் உரிச்சொல்லுமாகிய இவ்விரண்டினேயும் முற்குறித்த பெயரும் வினேயுமாகிய இரண்டுடன் சேர்த் தெண்ணச் சொல் நால்வகைப்படும் என்பது கருத்து. அவற்று வழி மருங்கிற் ருேன்றும் எனவே இவற்றது சிறப்பின்மை புலம்ை. உரிச் சொல்லினும் வழக்குப் பயிற்சியுடைமை நோக்கி இடைச் சொல்லே அதற்கு முற்கூறினர். சொற்பாகுபாடுணர்த்தும் இவ்விரு சூத்திரப்பொருள்களோடு எச்சவியலிற் செய்யுளிட்டச் சொல்லாக வகுத்துணர்த் தப்பெறும் திசைச் சொல் வடசொல் என்பவற்றையும் இயைத் துக் கூறும் முறையில் அமைந்தது, 269. அதுவே, இயற்சொற் றிரிசொ லியல்பிற் பெயர் வினே என விரண் டாகும் இடையுரி யடுத்து நான்கு மாந்திசை வடசொலணு காவழி. எனவரும் நன்னூற் சூத்திரமாகும்.