பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 மேற்காட்டிய சொல், இயற்சொல், திரிசொல் என்னும் இயல்பினையுடைய பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் என இரண்டாம். இவற்றுடன் இடைச் சொல்லும் உரிச் சொல்லும் அடுத்து நான்குமாம்; இவற்றுடன் திசைச் சொல்லும் வட சொல்லும் அணுகாவிடத்து என்பது இதன் பொருள். ஒருவன் ஒருத்தி என்ற அளவில் அவர்தம் கைகால் முத லிய அகத்துறுப்பும் ஆடையணி முதலிய புறத்துறுப்பும் அடங் குதல் போலப் பெயர் வினே என்ற மாத்திரையின் அவற்றின் அகத்துறுப்பாகிய விகுதி முதலிய இடைச்சொற்களும் புறத் துறுப்பாகிய வேற்றுமையுருபு முதலிய இடைச் சொற்களும் அடங்குதலானும், உரிச்சொல், பல்வகைப் பண்பும் பகர் பெய ர கி, என்றவாறு பெயருள் அடங்குதலானும், திசைச் சொல் லும் வடசொல்லும் இவற்றுள் யாதானுமொன்ருய் அடங்கு தலானும் இவற்றையடக்கி நின்ற தலைமையும் சிறப்புந்தோன் றப் பெயர் வினே என இரண்டாக வரையறுத்தார். பெயர் வினையுள் அடங்கியவற்றையே வேறுபாடறிதற்கு இடை, உரியெனப் பிரித்துத் தொகை கோடலின் அவற்றிற்கு அத் தலைமையும் சிறப்புமில்லையென்பது தோன்ற 'இடையுரியடுத்து நான்குமாம்? என்ருர் கொடுந் தமிழ் முதலிய சொல் செந்த மிழோடு விரவியவழி அவற்றைத் திசைச் சொல் என்றும், ஆரியச்சொல் தமிழ்நடை பெற்றவழி வடசொல் என்றும் தமி ழோடு தழுவப்படுமாயினும் தமிழ்ச் சொல்லோடு அவற்றை யியைத்துத் தொகை கோடல் ஒருதலையன்று என்பார் திசை வடசொல் அணுகாவழி என்ருர் . திசை வடசொலனுகா வழி? எனவே, இப் பகுதிப் படுவது தமிழ்நாட்டிற்குரிய சொல்லென்பது உம், திசைச்சொல் லும் வடசொல்லும் ஈண்டுச் சேரவும் பெறுமென்பது உம், சேர் தல் ஒருதலையன்மையின் அவற்றிற்கு இலக்கணம் ஈண்டுக் கூருரென்பது உமாயிற்று: எனவரும் மயிலநாதருரை இங்கு நினைக்கத் தகுவதாகும். ளகள்வி. அவற்றுட் பெயரெனப் படுபவை தெரியுங் காலே உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்