பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 ஆயிரு திணைக்கும் ஒரன்ன வுரிமையும் அம்மூ வுருபின தோன்ற லாறே. இவ்வியல்முதலில் ஐந்து சூத்திரங்களால் நான்கு சொற்கும் பொதுவிலக்கண முணர்த்திய ஆசிரியர், இதனுற் பெயர்ச் சொற்கு இலக்கணம் உணர்த்துகின்றர். (இ-ள்) மேற்கூறப்பட்ட சொல் நான்கனுள், பெயர் என்று சொல்லப்படுவன, உயர்திணைக்குரியனவாய் வருவனவும், அஃ றினக் குரியனவாய் வருவனவும், இரண்டு திணைக்கும் ஒத்த உரிமையவாய் வருவனவும் என மூன்று வகையினவாம்; அவை தோன்று நெறிக்கண். எ.று. ளசுக. இருதினேப் பிரிந்த ஐம்பாற் கிளவிக்கும் உரியவை யுரிய பெயர் வயி னன. இதுவும் பெயர்க் குரியதோர் இலக்கணம் கூறுகின்றது. (இ.ஸ்) இருதினைப் பிரிந்த ஐம்பாற் கிளவியாதற்குப் பெயருள் உரியன உரியவாம். எ-று. (உ-ம்) அவன், பெண்மகன், சாத்தன், என னகரவீறு உயர்திணை ஆண்பால் பெண்பால்களுக்கும் அஃறிணையாண் பாற்கும் உரியதாய் வந்தது. அவள், மக்கள், மகள் என ளகர வீறு உயர்திணைப் பெண்பால் பலர்பால்களுக்கும் அஃறிணைப். பெண்பாற்கும் உரியதாய் வந்தது. நம்பி, பெண்டாட்டி என வும் ஆடு உ, மகடூஉ எனவும் இகரவீறும் உகரவீறும் உயர் தினே ஆண்பால் பெண்பாலாகிய இருபாற்கும் உரியவாய் வந்தன. வினைச்சொல் இன்ன ஈறு இன்ன பாலுக்கு உரித்து என ஈறு பற்றித் தெளிவாக உணர்த்துமாறு போன்று பெயர்ச் சொல் ஈறுபற்றி இன்ன பாலுக் குரித்தென உணர்த்தலாகா மையின் வழக்கு நோக்கியுணர்க என்பார், உரியவை உரிய என்ருர் . ளசுஉ. அவ்வழி, அவனிவ னுவனென வரூஉம் பெயரும் அவளிவ ளுவளென வரூஉம் பெயரும்