பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 மேற் காலமொடு வரூஉம் வினேச்சொல் என்று ஓதிய தொல்காப்பியர், அம் ஆம் எம் ஏம்’ என வரும் இச்சூத்திர முதலாகப் பாலுணர்த்தும் சொற்களே ஒதினமையால், தொழில் உணர்த்தலும், காலங்காட்டலும், பால்காட்டலும் என வினைச் சொல் மூன்று கூறுகளேயுடையன என்பது கொள்ளப்படும் என்பர் தெய்வச்சிலேயார் . உண்டனம், உண்கின்றனம், உண்பம் என்றவழி உண் என்பது தொழில் உணர்த்திற்று. டு, கின்று, பு என்பன காலங் காட்டின. அன் சாரியையாகி நின்றது. அம் பாலுணர்த் திற்று?’ என்பது அவர்தரும் விளக்கமாகும். இங்ங்னம் வினைச்சொற்கள் தொழிலும் காலமும் பாலும் உணர்த்தும் மூவகை உறுப்புக்களையுடையனவாகத் தொல் காப்பியனர் குறிப்பாகப் புலப்படவைத்தாராயினும் பாலுணர்த் தும் எழுத்துக்களாகிய விகுதிகளே எடுத்துரைத்தாற் போன்று கால முணர்த்தும் எழுத்துக்களேத் தனியே எடுத்துரையாது வழக்கும் செய்யுளுமாகிய இலக்கியங்கண்டு உய்த்துணர வைத்துள்ளார். காலமுணர்த்தும் எழுத்துப்பற்றிச் சேனவரையர் கூறுவன இங்கு நோக்கத்தக்கனவாகும்.

  • அம், ஆம், எம், ஏம் என்பன மூன்று காலமும் பற்றி வரும். உம்மொடு வரூஉங் கடதற எதிர்காலம் பற்றிவரும். முன்னின்ற நான் கீறும் இறந்தகாலம் பற்றி வருங்கால், அம்மும் எம்மும் கடதற என்னும் நான்கன்முன் அன் (சாரியை) பெற்றுவரும். ஏம் அன் (சாரியை) பெற்றும் பெருதும் வரும். ஆம் அன் (சாரியை) பெருதுவரும்.

(உ-ம்) நக்கனம், நக்கனெம்; உண்டனம், உண்ட னெம், உரைத்தனம், உரைத்தனெம்; தின்றனம், தின்ற னெம் எனவும்; நக்கனேம், நக்கேம்; உண்டனேம், உண் டேம்; உரைத்தனேம், உரைத்தேம்; தின்றனேம், தின்றேம் எனவும், நக்காம், உண்டாம், உரைத்தாம், தின்ரும் எனவும் வரும். (அம் ஆம் எம் ஏம் என்னும்) அந்நான்கீறும் (கடதற வல்லாத) ஏனையெழுத்தின்முன் ரகாரமும் ழகாரமும் ஒழித்து இன்பெற்றுவரும் .