பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 (உ-ம்) காண்கு வந்தேன் என வரும். காண்கு யான் எனப் பெயரொடு முடிதல் இலக்கணம் என்று கொள்க: என்பர் தெய்வச்சிலேயார் . எதிர்காலம் பற்றி உலகவழக்கிற் பெருகப்பயிலாத குடுதுறு என்னும் விகுதிகளேப் பிற்கூருது மூன்று காலமும் பற்றி உலக வழக்கிற் பெருக வழங்கும் என் ஏன் என்பவற்றின் முன் கும் டும் தும் றும் என்னும் விகுதிகளுடன் இயைய வைத்தது செய்கு? என்பது போலச் செய்கும்? என்பதும் காண்கும் வந்தேம்’ என வினை கொண்டு முடியும் என்பது அறிவித்தற்கு என்பர் சேனவரையர், செய்கென் கிளவி வினையொடு முடி யினும் அமைக எனவே செய்கும் என் கிளவியும் வினேயொடு முடியினும் அமைக என்பது போந்ததாம்?’ என்பர் இளம்பூரணர். இவ்விதியினை, 332. செய்கெ ைெருமையுஞ் செய்குமென் பன்மையும் வினேயொடு முடியினும் விளம்பிய முற்றே. எனவரும் சூத்திரத்தால் விளக்கினர் நன்னூலார். செய்கு என்னும் தன்மையொருமை முற்றும் செய்கும் என்னும் தன்மைப்பன்மை முற்றும் பெயர்கொண்டு முடிதலே யன்றி வினைகொண்டு முடியினும் மேற்கூறிய முற்றுச் சொல்லே யாம்' என்பது இதன் பொருளாகும். எச்சங்களைப் போலாது வினைமுதலேத்தரும் விகுதியுறுப் போடுகூடி முற்றி நிற்றலின் முற்றெனப் பட்டதன்றிப் பயனிலே கொண்டு முற்றலின் முற்றெனப்பட்டதன்று என்பார், பெயரே யன்றி வினேயொடு முடியினும் விளம்பிய முற்றே யென்றர்: என்பர் சிவஞானமுனிவர். 'முற்றுச் சொற்கும் வினையொடு முடியினும் முற்றுச் சொலென்னும் முறைமையிற் றிரியா?? என வரும் பிற்கால அகத்தியச் சூத்திரம் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும்.