பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 மூன்று தலையிட்ட அந்நாலந்தும் என இயையும். இருபத்துமூன்றுமாவன: அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், றும், கு, டு, து, று, என், ஏன், அல், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார் என்பன ஈண்டுக்கூறியன கிளவியாக்கத்துட் கூறப்பட்ட படர்க்கைவினையே வேறல்ல என்பார் முன்னுறக் கிளந்த என்ருர். பாலுணர்த்தும் இடைச் சொற்பற்றி உயர்திணைப் படர்க்கை வினையுணர்த்துதல் ஈண்டுக் க்கூறியதனுற் பயன் எனவும், வழுக்காத்தற்கு இவற்றைத் தொகுத்து இலக்கண வழக்குணர்த்துதல் ஆண்டுக் கூறிய தற்ை பயன் எனவும் விளக்கந்தருவர் சேவைரையர். உளக. அவற்றுள், பன்மை யுரைக்குந் தன்மைக் கிளவி யெண்ணியன் மருங்கிற் றிரிபவை யுளவே. இஃது உளப்பாட்டுத் தன்மைக்கண் வருவதோர் திரிபு உணர்த்துகின்றது. (இ-ள்) கூறப்பட்ட இருபத்துமூன்று சொற்களுள், பன்மை யுணர்த்தும் தன்மைச்சொல், எண் இயலும்வழி அஃறிணையை யுளப்படுத்துத் திரிவன உள. எ-று. (உ-ம்) யானும் என் எஃகமும் சாறும் எனவரும். தன்மைப் பன்மை வினைச்சொல் உயர்திணையாகலின் உயர்திணையே உளப்படுத்தற்பாலன; அஃறிணையை உளப் படுத்தல் வழுவாயினும் அமைக என்பார், திரிபவையுள என்ருர். அதன்ை இச்சூத்திரத்தை முன்னுறக்கிளந்த உயர் திணையவ்வே' என்னுஞ்சூத்திரத்தின் பின் வைத்தார். திரியும் என்னது, திரிபவையுளவே என்ற்தன்ை, எல்லாந்திரியா, சிலவேதிரிவன. என்பர் சேனுவரையர். உளவி. யாஅ ரென்னும் வினவின் கிளவி யத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே. இஃது உயர்திணை வினைக்குறிப்பினுள் ஒன்று கூறுகின்றது.