பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 அகர வீறயடங்குதலானும், கள்ளிறு தானே நின்று ஒருவினைக் கிருய் வாராமையானும் ஈண்டுக் கொண்டிலரென்க2 என மயிலேநாதர் கூறும் விளக்கம் இங்கு நோக்கத்தகுவதாகும். உளயின. ஒன்றன் படர்க்கை தறட ஆர் நத குன்றிய லுகரத் திறுதி யாகும். இஃது அஃறிணை ஒருமைவினே கூறுகின்றது. (இ-ள்) ஒன்றனேயுணர்த்தும் படர்க்கை வினையாவது, த, ற, ட என்னும் மெய்களேயூர்ந்து நின்ற் குற்றியலுகரத்தை ஈருகவுடைய சொல்லாம். எ-று. தகரவுகரம் மூன்றுகால வினைக்கண்ணும், றகரவுகரம் இறந்தகால வினைக்கண்ணும், டகரவுகரம் தெரிநிலை வினைக் கண் வாராது வினைக்குறிப்பின்கண்ணும் வருதலின் அம் முறையே வைக்கப்பட்டன. தகர வுகரம் இறந்த கால வினேக்கண் வருங்கால், புக்கது, உண்டது, வந்தது, சென்றது, போயது, உரிஞயது எனக் (கால எழுத்துக்களாய) கடதறவும் யகரமுமாகிய உயிர் மெய்ப்பின் வரும். (போனது என னகர வுயிர்மெய்ப்பின் வருதல் சிதைவெனப்படும்.) நிகழ் காலத்தின் கண் நடவா நின்றது, நடக்கின்றது, உண்ணு நின்றது, உண்கின்றது என நில், கின்று என்பனவற்றேடு (சாரியை) அகரம் பெற்றுவரும். எதிர்காலத்தின்கண் உண்பது செல்வது எனப் பகரமும் வகரமும் பெற்றுவரும். றகரவுகரம், புக்கன்று, உண்டன்று, வந்தன்று, சென் றன்று எனக் (காலவெழுத்துக்களாகிய) கடதற என்பன வற்றின்முன் அன் (சாரியை) பெற்று வரும். கயின்று, கூயிற்று; போயின்று, போயிற்று என ஏனேயெழுத்தின்முன் இன்பெற்று வரும். ஆண்டு இன்னின் னகரம் திரிந்தும் திரி யாதும் வருதல் கொள்க. வந்தின்று என்பது, எதிர்மறுத்தலேயுணர்த்துதற்கு வந்த இல்லினது லகரம் னகரமாய்த் திரிந்த எதிர்மறை