பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 (இ-ள் பெண் தன்மையினை விட்டு ஆண் தன்மையினே அன் அவனவாகிய பேடுகள் உயர்தினை யாண்பாலாம். ஆண் தன்மையினே விட்டுப் பெண் தன்மையினே அவாவுவனவாகிய பேடுகள் உர்யதினேப் பெண்பாலாம்; இவ்விருவகைப் பேடு களும் உயர்தினையா (ய்ப் பால் பிரிந்திசைத்) தலேயன்றி அஃறிணையை ஒப்பனவுமாம். எ-று. ஈண்டு விடுதல் என்னும் சொல் குறைதலேயும் அவாவுதல் என்னும் சொல் மிகுதலையும் உணர்த்தி நின்றன. ஆணி லக்கணமும் பெண்ணிலக்கணமும் விரவி ஒருவகையேனும் நிரம்பாது நிற்கும் பேட்டினைப் பாற்பொதுமையின் நீக்கிக் குறைந்ததினின்றும் பிரித்து மிக்கதைேடும் சேர்க்கும் முறை யின அறிவுறுத்துவார், பெண்மையிற் குறைந்து ஆண்மையின் மிக்கனவாகிய பேடு ஆண்பால் எனவும், ஆண்மையிற் குறைந்து பெண்மையின் மிக்கனவாகிய பேடு பெண்பால் எனவும் பகுத் துரைத்தார். இருதிறமும் விரவி நிற்கும் இப்பேடுகளே அத் தன்மைகளின் மிகுதி குறைவு நோக்கது பொதுப்பட நோக் கிய வழி ஆண் பெண் என்னும் ஒன்றன்பாற்படுத்தல் கூடாமை யின் அப்பாலினவாம் உயர்தினையுமன்றி, அஃறிணை யிலக்கண மின்மையின் அஃறிணையுமன்றி, உயிருள்ளனவற்றுள் ஆண் பெண் என்னும் பகுப்பிலவாகி நின்ற அஃறிணையையொக்கும் என்பார் இருமையும் அஃறிணை யன்னவுமாகும்? என்றர். இங்ங்னம் பொதுப்படக் கூறியவற்றுள் பெண்மைவிட்டு ஆண் அவாவுவனவாகிய பேட்டினை மகடூஉ மருங்கிற் பால்திரி கிளவி எனவும், ஆண்மை விட்டு அல்லது அவாவுவனவாகிய பேட்டினே பெண்மை சுட்டிய-ஆண்மை திரிந்த-பெயர்நிலைக் கிளவி எனவும் ஆண்மை பெண்மையாகிய இவ்விருதன்மையும் அல்லாத அலியினத் தன்மை திரிபெயர் எனவும் தொல் காப்பியர் வேறுபிரித்துக் கூறியுள்ளமை இங்கு நினைக்கத்தகுவ தாகும. ஆணுறுப்பிற் குறைவின்றி ஆண்டன்மை யிழந்த தூஉம் பெண்ணுறுப்பிற் குறைவின்றிப் பெண் தன்மை யிழந்தது உம், பெண்பிறப்பிற் ருேன்றிப் பெண்ணுறுப்பின்றித் தாடி தோற்றி