பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 (உ. ம்) ஐதே காமம் யானே? எனவும், சேற்றுநில் முனே இய செங்கட் காரான்? எனவும், வைநுனைப் பகழி: எனவும், போரெறுழ்த் திணி தோள்’ எனவும், ஐ, முனேவு, வை, எறுழ் என்னும் உரிச்சொற்கள் முறையே வியப்பு, முனிவு, கூர்மை, வலி ஆகிய குறிப்புணர்த்தின. கூஅசு. மெய்பெறக் கிளந்த வுரிச்சொ லெல்லாம் முன்னும் பின்னும் வருபவை நாடி ஒத்த மொழியாற் புணர்த்தன. ருணர்த்தல் தத்த மரபிற் ருேன்றுமன் பொருளே. இஃது இவ்வியலிற் கூறப்பட்ட உரிச்சொற்கெல்லாம் புற னடை கூறுகின்றது. (இ-ஸ்) இச்சொல் இப்பொருளுக்கு உரித்து என மேற் பொருள்பெறக் கூறப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றையும், அவற்றின் முன்னும் பின்னும் வரும் மொழிகளே ஆராய்ந்து, அவற்றுள் பொருளுக்குத் தக்க மொழியாலே ஒரு பொரு ளுணர்த்துக; இவ்வாறு உணர்த்தவே, வரலாற்று முறைமை யால் தத்தமக்குரிய பொருள் விளங்கும். எ-று. ஒருசொல் பலபொருட்கும் பலசொல் ஒருபொருட்கும் உரியவாய் வரும் உரிச்சொற்களால் ஒரு பொருளே வரைந்து ணர்த்துங்கால் அவற்றின் முன்னும் பின்னும் வருகின்ற சொற் கஜா நாடி வரலாற்று முறைமையால் அப்பொருளுணர்த்துக என்பதாம். (உ-ம்) போகு கொடி மருங்குல்' என்பதிற் போகல் என்பது கொடியென முன்வருஞ் சொல்லால் நேர்மையை உணர்த்திற்று. திரிகாய் விடத்தரொடு கார் உடைபோகி: என்பதிற் போகல் என்பது அதனையடுத்துள்ள உடை (மரம்) என்னும் சொல்லால் நெடுமையை உணர்த்தியது. உறுகால்: என்பதில் உறு என்னும் உரிச்சொல் அடுத்துள்ள கால் என்னுஞ் சொல்லால் மிகுதிப் பொருளுணர்த்தியது. அணங்கிய செல்லல்: என்பதில் செல்லல் என்பது, அணங்கிய என்னுஞ் சொல்லால் இன்னுமையை உணர்த்திற்று. இங்ங்னங் கூறவே முன்னும்