பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. எச்சவியல் கிளவியாக்கம் முதலாக உரியியல் இறுதியாகவுள்ள இயல் களுள் உணர்த்துதற்கு இடமில்லாமையாற் கூறப்படாது எஞ்சி நின்ற சொல்லிலக்கணம் எல்லாவற்றையுந் தொகுத்துணர்த் துவது இவ்வியலாதலின் எச்சவியல் என்னும் பெயர்த் தாயிற்று. பத்துவகையெச்சம் உணர்த்தலால் எச்சவியல் எனப் பெயராயிற்றென்பாரு முளர். பலபொருட்டொகுதிக்கு அத்தொகுதியைச் சேர்ந்த ஒரு பொருளாற் பெயரிடுங்கால் அத்தொகுதியுள் தலைமையான பொருள் பற்றியோ பெரும் பான்மையான பொருள் பற்றியோ பெயரிடுதல் மரபு. அத் தகைய தலைமைப் பொருளாகவோ பெரும்பான்மைப் பொரு ளாகவோ இவ்வெச்சங்களைக் கொள்ளுதற் கில்லாமையால் அவர் கூற்றுப் பொருந்தாது என்பர் சேவைரையர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களே 66-ஆக இளம்பூரணரும் 67-ஆகச் சேனவரையரும் நச்சினர்க்கினியரும் பகுத்துப் பொருளுரைப்பர். இவ்வியலிள்ள இறப்பின் நிகழ்வின்? (31) எவ்வயின் வினேயும் (32) "அவைதாந் , தத்தங் கிளவி (33) என்னும் மூன்று சூத்திரங்களையும் வினையிலக் கணமாகிய இயைபு நோக்கி வினையியலிறுதியில் வைத்து உரை கூறி ர்ை தெய்வச்சிலேயார் . அவருரையின்படி இவ்வியற் சூத்திரங்கள் அறுபத்தொன்ருகும். இவ்வியலின் கண் 1முதல் 15வரையுள்ள சூத்திரங்கள் செய்யுட்குரிய சொல்லும் அவற்றது இலக்கணமும் அவற்ரு ற் செய்யுள் செய்யும் வழிப்படும் விகாரமும் செய்யுட்பொருள் கோளும் உணர்த்துவன. 16 முதல் 25 வரையுள்ள சூத்திரங் கள் வேற்றுமைத்தொகை முதலிய அறுவகைத் தொகைச் சொற்களின் இயல்பினை விரித்துரைப்பன. 26 முதல் 30 வரை யுள்ளவை சொல்மரபு பற்றிய வழுக்காப்பன. 31 முதல் 88 வரையுள்ளவை முற்றுச் சொற்கு இலக்கணங் கூறுவன. 34